Chennai Rain: சென்னையில் மழை பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
Chennai Rain-Fog: சென்னையில் மழை மட்டுமல்ல பனியும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே மேகமூட்டங்கள் சூழ்ந்து காணப்படுவதை பார்கக்ப்படுகிறது. இந்நிலையில், சென்னை வானிலை குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதை பார்ப்போம்
இன்று (10-01-2023) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 2.30 செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும், நாளை ( 11.01.2025 ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டியம் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை அறிவிப்பு:
இன்று மற்றும் நாளை:
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் பொதுவாக காலை வேளையில் வேரான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
12-01-2025
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-01-2021:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
14-01-2025:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-01-2025:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில், பதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-01-2015:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.