Drain Work: சென்னைவாசிகள் கவனத்திற்கு..டேக் டைவர்சன்!போக்குவரத்து மாற்றம் பற்றிய விவரம்!
Storm Water Drain Work: டி.டி.கே. சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பணி நடைபெற இருப்பதால் மூன்று நாட்களுக்கு தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை E-3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.டி.கே. சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பணி நடைபெற இருப்பதால் மூன்று நாட்களுக்கு தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
டி.டி.கே. சாலையில் டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை முன்புறம் குடிநீர் வடிகல் வாரிய பணி வரும் 25.05.2023 முதல் 27.05.2023 வரை நடைபெற உள்ளதால் இந்த வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TTK சாலையில் இருந்து மியூசிக் அகாடமி ( MUSIC ACADEMY) நோக்கி செல்லும் வாகனங்கள் ஆழ்வார்பேட்டை போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முரேஸ் கேட் சாலையில் சென்று வலதுபுரம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கள் சாலை வழியாக கத்தீட்ரல் சந்திப்பை அடைந்து இடது மற்றும் வலதுபுறம் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
Music Academy முதல் TTK சாலை x Eldams கத்தீட்ரல் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கமான பாதையில் செல்லாம் எனவும் இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் வாசிக்க..
Health: கோடையில் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா..? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!