மேலும் அறிய

10 வருடங்களில் இல்லாத ஜூன் மழை.. தரவுகள் சொல்லும் உண்மை.. இது சென்னை வானிலை..

முன்னதாக ஜூன் 8, 2016 அன்று ஒரே இரவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட முந்தைய சாதனையான 5.3 செ.மீ. இது முறியடித்துள்ளது.  அதற்கு முன்பு அதிகபட்சமாக ஜூன் 14, 1996 இல் 35 செ.மீ மழை பெய்தது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் இடியுடன் கூடிய மழை பெய்ததால், நகரின் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியது, இதன் விளைவாக முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு நல்ல வரத்து ஏற்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் ஜூன் மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும். திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை காரணமாக 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரே நாளில், நகரம் அதன் மாதாந்திர ஒதுக்கீட்டான 5.6 செ.மீ.யை விட அதிக மழையைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக ஜூன் 8, 2016 அன்று ஒரே இரவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட முந்தைய சாதனையான 5.3 செ.மீ. இது முறியடித்துள்ளது.  அதற்கு முன்பு அதிகபட்சமாக ஜூன் 14, 1996 இல் 35 செ.மீ மழை பெய்தது.

திங்கட்கிழமை அன்று சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல வானிலை நிலையங்கள் மழையைப் பதிவு செய்தன. மாநிலத்திலேயே அதிகபட்சமாக மேற்கு தாம்பரத்தில் 13 செ.மீ., பெய்தது அதைத் தொடர்ந்து தரமணி மற்றும் கொரட்டூரில் 11 செ.மீ. மற்றும் சென்னை விமான நிலையத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


10 வருடங்களில் இல்லாத ஜூன் மழை.. தரவுகள் சொல்லும் உண்மை.. இது சென்னை வானிலை..

திங்கள் அன்று மாலை நகரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. கனமழை பெய்ததால் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட நுங்கம்பாக்கத்தில் 34.9 டிகிரி செல்சியஸாகவும், மீனம்பாக்கத்தில் 35.5 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

லேசானது முதல் மிதமானது வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேனி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செவ்வாய்க்கிழமை சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை முதல் மாநிலத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென் கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை மற்றும் மேற்குக் காற்று வலுவடைந்ததால், இடியுடன் கூடிய மழை கடலோரப் பகுதிகளுக்குத் தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல வடக்கு உள் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரவு முழுவதும் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு அதிகளவு நீர்வரத்து அதிகரித்து அதன் நீர்த்தேக்கத்தை 95 சத விகிதமாக ஆக உயர்த்தியது. ரெட் ஹில்ஸில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றும் ஒன்று வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
Tamil Nadu Budget 2026: இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் வெளியான மாஸ் அப்டேட்!
இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் மாஸ் அப்டேட்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget