Chennai rains : டமால் டுமீல் இடி மின்னல்! சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! சாலையில் பெருக்கெடுத்தோடும் மழைநீர்!
சென்னை அடுத்த புறநகர் பகுதியான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன் தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. அதன்படி, அடையாறு, நந்தனம், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், சென்ட்ரல், மாம்பலம், புரசைவாக்கம், பெசண்ட் நகர், குரோம்பேட்டை, கே.கே.நகர், கோட்டூர் புரம், சைதாப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதேபோல், சென்னை அடுத்த புறநகர் பகுதியான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன் தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையம் அறிக்கை :
Much much..muchhhhh neeeded storm for us.
— Hrishi Jawahar (@jhrishi2) August 21, 2022
KK Nagar PWS has recorded 80 mm already. #Chennairains pic.twitter.com/rC8DOtAfZS
45 mm at 100mm/hr Gusts 40km/h #Mambalam #Chennairains stay indoor next 30min pic.twitter.com/N5azjwyZtC
— Rainstorm - வானிலை பதிவுகள் (@RainStorm_TN) August 21, 2022
𝑾𝒉𝒆𝒏 𝒊𝒕 𝒓𝒂𝒊𝒏𝒔
— Chennai_Rainsoul 😇 (@RainsoulC) August 21, 2022
𝑰𝒕 𝒑𝒐𝒖𝒓𝒔 ⚡#chennairains pic.twitter.com/yC9qWDr9P6
தமிழ்நாடு மற்றும் காரைகால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Severe #Thunderstorms around #Chennai and suburbs, those who are outside please get inside shelters as much as possible, do not step out unless it is absolutely necessary. #Rains may continue possibly up to 10:00 PM and gradually reduce after that. #ChennaiRains #COMK pic.twitter.com/i84dbKYJ6a
— Chennai Rains (COMK) (@ChennaiRains) August 21, 2022
ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை :
வானம் அடுத்த இரு நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.