Power Cut in Pulianthope: தொடர்ந்து 8 நாட்களாக மின்சாரம் இல்லை... போலீஸ் குடியிருப்புகளில் குவியும் புகார்...
புளியந்தோப்பில் உள்ள உதவி - ஆய்வாளர் குடியிருப்பில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் கடந்த 8 நாட்களாக மின்சாரம் இன்றி சிரமப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, மழையில் சிரமப்பட்ட பொதுமக்களை பாதுகாக்க சென்னை மாநகர காவல் துறையினர் இரவு பகல் பாராமல் சேவை செய்து வந்தனர்.
இந்தநிலையில், புளியந்தோப்பில் உள்ள உதவி - ஆய்வாளர் குடியிருப்பில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் கடந்த 8 நாட்களாக மின்சாரமின்றி சிரமப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அந்த குடியிருப்பிலுள்ள காவலர் ஒருவர் தெரிவிக்கையில், கனமழை பெய்தபோது எங்கள் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மின்சாரம் இல்லாமல் போனது. நிலைமை சீரானதும் நாங்கள் வசிக்கும் குடியிருப்பை தவிர, அக்கம்பக்கத்தில் உள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து, மற்றொரு காவலர் இதுகுறித்து கூறியபோது, குடியிருப்பு வளாகத்தில் உள்ள நிலத்தடி கேபிளில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது. மின்கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் குடியிருப்பாளர்கள் அப்பகுதியை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகும். அருகிலுள்ள அனைத்து தெருக்களிலும் முன்பு போலவே இயங்கிக் கொண்டிருக்கும்போதும், போலீஸ் குடியிருப்புகள் இன்னும் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், ஒரு மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தவறு எதுவும் நடக்காமல் இருக்க விரைவில் தவறுகள் சரிசெய்யப்படும். தண்ணீர் தேங்கவில்லை என்றால், நாங்கள் எப்பொழுதோ ஆய்வு செய்து மின்சார விநியோகத்தை வழங்கியிருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
சேதமடைந்து காணப்படும் பிரஞ்சுக்காரர்கள் கட்டிய செல்லிப்பட்டு அணை - மழைநீர் கடலில் கலப்பதால் வேதனை
சத்யா சீரியல் ஆயிஷாவுக்கு, இவருக்கும் சண்டையா? ஹாட் டாபிக்கின் முடிவு என்ன தெரியுமா?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்