சென்னையில், மழைநீர் தேக்கத்தைத் தடுக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நிபுணர் குழு - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இரு தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.
அதேபோல், கடந்த 7 ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பதிவாகி உள்ளது. இந்த கனமழை காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் இந்தாண்டு 74 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 2015 ம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வடிகால் பாதைகள் மற்றும் தேங்கிய நீர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், 2015 ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு ஏற்பட்ட வர்தா புயல், நிவர் புயல் தாக்கத்தால் தொடர்ந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர்கள் தொடர்ந்து சூழ்ந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
(தலைமை)
1. டாக்டர் வி. திருப்புகழ், ஐ.ஏ.எஸ்., (ஓய்வு)
தலைமை திட்டமிடுபவர், நகரம் மற்றும் கிராம திட்டமிடல் அமைப்பு,
புது தில்லி.
2. நம்பி அப்பாதுரை,
இயக்குனர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலகம் வளங்கள் நிறுவனம்.
3. பேராசிரியர் ஜானகிராமன்,
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்
4. பேராசிரியர் கபில் குப்தா,
சிவில் இன்ஜினியரிங் துறை, ஐஐடி மும்பை
5. டாக்டர். பிரதீப் மோசஸ்,
மனித குடியேற்றத்திற்கான இயக்குனர் மையம்,
தேசிய அளவில் இருந்து அண்ணா பல்கலைக்கழக பிரதிநிதி சென்சிங் துறை, ஹைதராபாத்
6. பேராசிரியர் திருமலைவாசன்,
ரிமோட் சென்சிங் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம்.
7. பேராசிரியர். பாலாஜி நரசிம்மன்,
சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர், சுற்றுச்சூழல், நீர்வளப் பொறியாளர் (பிரிவு), ஐ.ஐ.டி.
ஆகியோருடன் மேலும் 5 பேர் கொண்ட குழு இதில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்