மேலும் அறிய

சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு சுரங்க வழித்தடங்களில் நிரம்பி வழியும் மழை நீர்: போக்குவரத்து பாதிப்பு

" தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் "

சென்னையில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல சாலைகளிலும் சில இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. சுரங்கப்பாதையில் தண்ணீர், சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி கடைந்துள்ளனர். சுரங்கப் பாதையில் சூழ்ந்துள்ள தண்ணீரை  வெளியேற்றும்பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.   இதேபோன்று தாம்பரம் பகுதியில் உள்ள இரும்புலியூர் ரயில்வே சுரங்க பாதையிலும், தண்ணீர் தேங்கியுள்ளது. அவற்றையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தொடர் மழை 
 
தொடர் மழை எதிரொலியாக சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதேபோல சென்னைக்கு அருகே இருக்கும் மாவட்டங்களான காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோக வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மழை தொடர்புக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 தென் சென்னை பகுதிகளில் 150 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 137 மில்லி மீட்டர் மழையும் தரமணியில் 117 மில்லிமீட்டர் ,செம்பரம்பாக்கத்தில் 109 மில்லி மீட்டர் மழையும், கொரட்டூரில் 84 மில்லிமீட்டர் மழையும், பூந்தமல்லியில் 74 மில்லி மீட்டர் ,நுங்கம்பாக்கத்தில் 67 மில்லி மீட்டர் மழையும், மேற்கு தாம்பரத்தில் 62 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூரில் சராசரியாக 50 மில்லி மீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 79 மில்லி மீட்டர் மழையும்,பதிவாகியுள்ளது. இது மட்டுமில்லாமல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்தில் 68 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம்ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3645 மி கன அடியில், தற்போது 2403 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 1146 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியிலிருந்து 174 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3300 மி கன அடியில் தற்போது 2178 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து 258 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு, ஆன 1081 மி.கன அடியில் 428 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு நீர் வரத்து 12 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி கனடியில் தற்போது 1257 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 330 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவான 500 மி கன அடியில் தற்போது 425 மில்லியன் கன அடியாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Embed widget