Chennai Rain: சென்னையில் அடுத்த 3 மணிநேரம் எங்கெல்லாம் மழை பெய்யும்..? வானிலை ஆய்வு மையம் தகவல் இதோ..!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட தமிழகம்-புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட தமிழகம்-புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை:
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருவொற்றியூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பொன்னேரி பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Depression over southwest Bay of Bengal, near latitude 10.9 N and longitude 85.0 E, about 560 km east-northeast of Jaffna (Sri https://t.co/aNhZO0IsZ9 move west-northwestwards and weaken gradually into a WML while moving towards south AP and North TN-Puducherry coasts in 24 hours pic.twitter.com/Pv9wySvJZw
— India Meteorological Department (@Indiametdept) November 20, 2022
இதுதொடர்பான அறிக்கையின்படி, வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்த, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, கூடுதல் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-20-20:57:43 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பொன்னேரி பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/1bQ2cDAxzx
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 20, 2022
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
அதன்படி, இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 600 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 670 கிமீ தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் நிலை கொண்டுள்ளது. தற்போதைக்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலில் அதே பகுதியில் நீடிக்கும் எனவும், மெதுவாக மேற்கு - வடமேற்கு திசையில், புதுச்சேரி - தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கான வாய்ப்பு:
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.11.2022 மற்றும் 24.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.