Chennai Powercut: சென்னையில் இன்றும், நாளையும் எந்தெந்த இடங்களில் பவர்கட்.. லிஸ்ட் இதோ..
Chennai Power cut : சென்னையில் இன்று, நாளை எங்கெல்லாம் மின் தடை என்பது குறித்த விவரம் இதோ!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் இன்று மற்றும் நாளை (ஜனவரி 03, 04) மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும். அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று
ஆவடி பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் இன்று மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாபிராம் சிடிஎச் சாலை, ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர், விஜிவி நகர் முழுப் பகுதி, மாடர்ன் சிட்டி, டிரைவர்ஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
ஐடி காரிடர்
ஐடி காரிடர் பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் இன்று மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமணி, கொட்டிவாக்கம் 2வது பிரதான சாலை, நேரு நகர், 3வது பிரதான சாலையில் ஒரு பகுதி (ராயல் என்ஃபீல்டு நிறுவனம்) மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
நாளை
தாம்பரம்
தாம்பரம் பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் நாளை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராதா நகர், கண்ணன் நகர், சாந்தி நகர், காந்தி நகர், நெமிலிச்சேரி உயர் சாலை, பெரியார் நகர், செந்தில் நகர், ஏஜிஎஸ் காலனி, சோமு நகர், ஜிஎஸ்டி சாலை, ஹஸ்தினாபுரம் புருசோத்தமன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
பெரம்பூர்
பெரம்பூர் பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் நாளை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஎஃப் பகுதி அயனாவரம் பகுதி, வில்லிவாக்கம் பகுதி, சீயாளம் தெரு, தாந்தோணியம்மன் கோயில் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, கே.கே.நகர், யுனைடெட் இனிடா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அண்ணா நகர்
அண்ணா நகர் பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் நாளை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரம்பாக்கம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜிவி நகர், சமயபுரம், அண்ணா தெரு, முதல் கட்டம், இரண்டாம் போரூர் கார்டன், ஆண்டாள் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.