Chennai Powercut: சென்னையில் இன்றும், நாளையும் எந்தெந்த இடங்களில் பவர்கட்.. லிஸ்ட் இதோ..
Chennai Power cut : சென்னையில் இன்று, நாளை எங்கெல்லாம் மின் தடை என்பது குறித்த விவரம் இதோ!
Chennai Power cut : சென்னையில் இன்று, நாளை எங்கெல்லாம் மின் தடை என்பது குறித்த விவரம் இதோ!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் இன்று மற்றும் நாளை (டிசம்பர் 26, 27) மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும். அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மின்தடை
தொண்டியார்பேட்டை:
மீஞ்சூர் டவுன், டிஎச் ரோடு, பிடிஓ அலுவலகம், சீமாவரம், நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, கரையன்மேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது.
நாளைய மின்தடை
போரூர்:
திருமுடிவாக்கம் குன்றத்தூரின் ஒரு பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, பழந்தண்டலம், சோமங்கலம், வரதராஜபுரம், பெரியார் நகர், வழுதாளம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது.
அம்பத்தூர்:
நொளம்பூர், அடையாலம்பேட்டை, முகப்பேர் மேற்கு, ராஜன் குப்பம், ஜெஸ்வந்த் நகர், வெள்ளாளர் தெரு, கங்கை அம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.