Chennai Power Shutdown: சென்னை மின் தடை- நாளை(28.06.26) தாம்பரம், பல்லாவரம், போரூரில் மின்சாரம் இருக்காது!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(28.06.25) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பல இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளைய மின்தடை: 28.06.2025
இந்நிலையில், நாளை(23.06.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (28.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
தாம்பரம்: சேலையூர் கற்பகம் நகர், ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், பரத் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், பாரத் மருத்துவக் கல்லூரி, அகரம் மெயின் ரோடு ஒரு பகுதி.
பல்லாவரம்: எஸ்பிஐ காலனி, புருசோத்தமன் நகர் பகுதி, கஜலட்சுமி நகர், கஜபதி நகர், என்எஸ்ஆர் சாலை, கமலா தெரு, எம்ஜிஆர் தெரு, பச்சப்பா நகர், குமரன் குன்றம் பகுதி.
போரூர்: குன்றத்தூர் கோவில் அலை, குமரன் நகர், பிகேவி மகா நகர், ஆர்.பி.தர்மலிங்கம் நகர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பையடுத்து, சென்னையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றார்போல் தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















