மெட்ரோ பயணிகளுக்கு குட்நியூஸ் ; இனி 3 நிமிடங்களில் ரயில் !! எந்த பகுதிக்கு தெரியுமா ?
சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டை , மற்றும் விம்கோ நகர் வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் - சென்னை மெட்ரோ

சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டை , மற்றும் விம்கோ நகர் வழித் தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ;
நீல வழித் தடத்தில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது.
விரைவான பயணம் - உடனடி அமல்
காலை நெரிசல் நேரங்களிலும் (காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை) மற்றும் மாலை நெரிசல் நேரங்களிலும் (மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை) ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, விரைவான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஏற்பாடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.





















