மேலும் அறிய
Advertisement
Chess and Surfing : மகாபலிபுரத்தில் செஸ் போட்டி மட்டும் நடக்கல... இந்த போட்டியும் நடக்குது.. சுவாரஸ்ய தகவல்கள் இங்கே..
மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலை சறுக்கும் போட்டி எட்டு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே தேசிய அளவிலான கடல் அலை சறுக்கு போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்-பெண் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அளவில் அதிக வேகமான அலைகள் தமிழகத்திலுள்ள கோவளம் மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் வீசுவதாக வீரர்கள் தெரிவிக்கின்றனர் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் இப்பகுதியில் ஆண்டுதோறும் அலை சறுக்கு பயிற்சி பெறுவது போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலை சறுக்கும் போட்டி 8 மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு pic.twitter.com/uGSL5aQ3WD
— Kishore Subha Ravi (@Kishoreamutha) August 1, 2022
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக அறை பயிற்சி செய்யமுடியாத நிலையில் போட்டிகள் நடத்த முடியாமல் இருந்தது தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் அலை சறுக்கு போட்டி இடம்பெற்றுள்ளதால் போட்டியில் பங்கு பெறுவதற்கு பயிற்சி மேற்கொண்டு தேசிய அளவில் சாதனை படைக்க உள்ளனர்
மாமல்லபுரம் பகுதியில் 2015 ஆம் ஆண்டு கடைசியாக தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது இப்போட்டிகளில் உள்ளூர் வீரர்களும் தேசிய வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
அலை சறுக்கும் போட்டி
அலைச் சறுக்கு என்பது நீர் விளையாட்டு ஆகும். தக்கைபலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்வார். பொதுவாக, இந்த விளையாட்டில் ஒருவரே பங்கேற்பார். போட்டிகளும் நடைபெறுவதும் உண்டு. பெரும்பாலும் இந்த விளையாட்டை கடலில் மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். ஏரிகளில் செயற்கையாக உருவாக்கப்படும் அலைகளிலும் விளையாடுவதும் உண்டு. இந்த தக்கைபலகைக்கு சர்ஃப் போட் என்ற பெயர் உண்டு. இது ஒன்பது அடிவரையிலும் நீளம் கொண்டதாக இருக்கும். இதை காலில் இணைத்துக் கொண்டு விளையாடத் துவங்குவர். ஐந்தடி வரையிலும் உயரம் கொண்ட அலைகளில் பயணித்து, அவற்றிலேயே சாகசம் செய்வோருக்கு போட்டிகளின் போது அதிக புள்ளிகள் வழங்கப்படும். இந்த விளையாட்டிற்கான அடிப்படை விதிகளும், வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செக்மேட் 8: செஸ் ஒலிம்பியாடும்.. ஒலிம்பிக்ஸூம்.. என்னென்ன ஒற்றுமை வேற்றுமை?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion