Chess Olympiad 2022: செக்மேட் 8: செஸ் ஒலிம்பியாடும்.. ஒலிம்பிக்ஸூம்.. என்னென்ன ஒற்றுமை வேற்றுமை?
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்கி நடைபெற உள்ளது.
![Chess Olympiad 2022: செக்மேட் 8: செஸ் ஒலிம்பியாடும்.. ஒலிம்பிக்ஸூம்.. என்னென்ன ஒற்றுமை வேற்றுமை? Chess Olympiad 2022: Difference between Chess Olympiad and olympic as chess olympiad to start tomorrow in chennai with special opening ceremony Chess Olympiad 2022: செக்மேட் 8: செஸ் ஒலிம்பியாடும்.. ஒலிம்பிக்ஸூம்.. என்னென்ன ஒற்றுமை வேற்றுமை?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/27/ee8296fdd175a247489630aa94c4385c1658937730_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்கான கடைசி கட்ட ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடைபெற உள்ள தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்:
ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டை சேர்க்கவில்லை என்ற காரணத்திற்காக தொடங்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளை போல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளிலும் பரிசுகளுக்கு பதிலாக பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் குழுவாக மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் குழுவாகவும் தனியாகவும் பங்கேற்க முடியும்.
செஸ் ஒலிம்பியாட் வரலாறு:
1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டைச் சேர்க்க பணிகள் நடைபெற்றது. எனினும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. தொழில்முறை வீரர்கள் மற்றும் கேளிக்கைக்காக விளையாடும் நபர்களுக்கு இடையே வேறுபாடு அறிய முடியாது என்பதால் செஸ் போட்டி அப்போது ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.
மேலும் படிக்க:செக்மேட் 7: Tiger of Madras.. செஸ் விளையாட்டின் அசைக்கமுடியா மன்னவன் ஆனந்த்...
சர்வதேச செஸ் நாள்:
இதைத் தொடர்ந்து 1924ஆம் ஆண்டு முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டி அப்போது அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக அறிவிக்கப்பட்டது.
முதல் செஸ் ஒலிம்பியாட்:
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) 1927ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது. 1927ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் தொழில்முறை வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே 1927 மற்றும் 1928ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகின் தலை சிறந்த வீரர்கள் இடம்பெறவில்லை.
அதன்பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. எனினும் இரண்டாம் உலகப் போரின் போது இந்த ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)