Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Chennai Rain: சென்னையில், தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
Chennai Rain: சென்னையில் சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், தற்போது மழையானது பெய்து வருகிறது. அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது மழையானது பெய்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த சில தினங்களில் எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது என பார்ப்போம்.
03.10.2024 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04.10.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
05.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஈரோடு, சோம் கடலூர். மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
06.10.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். . சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு. நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.