மேலும் அறிய

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரச்னை; மகனுடன் ரயில் முன் பாய முயன்ற தாய் - டிரைவரால் தப்பிய உயிர்கள்

குடும்ப பிரச்னையால் மனமுடைந்த அரசு பெண் ஊழியர், தனது 4 வயது மகனுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

குடும்ப பிரச்னை

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா. இவர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பிரேமலதாவின் மூத்த மகனின் பிறந்தநாள் விழாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வீட்டில் கொண்டாடினர். அப்போது பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பிரேமலதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரேமலதா மிகவும் மன வேதனையில் இருந்தார்.

என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினர்

இந்நிலையில் நேற்று காலை பிரேமலதா, தனது 4 வயதான இரண்டாவது மகனை அழைத்துகொண்டு ஊரப்பாக்கம் ரயில் நிலையம் வந்தார். பின்னர் அவர், மகனுடன் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கிடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் மகனுடன் நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்த மின்சார ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினர். எனினும் ரயில் மெதுவாக சென்று தண்டவாளத்தில் நின்ற பிரேமலதா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஆம்புலன்சு வர முடியாது என்பதால் பயணிகள் உதவியுடன் காயம் அடைந்த பிரேமலதாவையும், அவரது மகனையும் அதே மின்சார ரெயிலில் ஏற்றி தாம்பரம் வந்தனர்.

தயாராக நின்ற ஆம்புலன்சு

இதற்குள் இதுபற்றி ரயில்வே போலீசுக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சு ஊழியர்கள் பிரேமலதாவையும் அரவது மகனையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் பிறந்த நாள் கொண்டாடியதால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரேமலதா தனது மகனுடன் சேர்ந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. சரியான நேரத்தில் மின்சார ரயிலை டிரைவர் நிறுத்தியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். மின்சார ரயிலை சாதுர்யமாக நிறுத்திய டிரைவரை பொது மக்கள் பாராட்டினர். இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Suicidal Trigger Warning.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget