மேலும் அறிய

Chennai ; வீடு பத்திர பதிவின் போது கள ஆய்வு தாமதம் , எதனால் சிக்கல் ? தீர்வு என்ன

கட்டடத்தின் மதிப்பு சரியா என்பதை உறுதி செய்வதற்கான களஆய்வு உரிய காலத்தில் நடக்காததால் , பதிவு முடிந்தும் பத்திரங்களை பெற வீடு வாங்கியோர் காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.

பத்திரப்பதிவு - வழிகாட்டுதல் மதிப்பு

தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் பணிகள் 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தாக்கல் செய்யப்படும் பத்திரங்களில் நிலத்தின் மதிப்பானது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்புக்கு இணையாக இருக்க வேண்டும். அந்த நிலத்தில் கட்டடம் இருந்தால் , அதற்கான மதிப்பையும் சரியாக குறிப்பிட வேண்டும். பொதுப்பணி துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு , இந்த மதிப்பு சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட கட்டடம் எப்போது கட்டப்பட்டது. எந்த வகை பொருட்களால் கட்டப்பட்டது என்ற அடிப்படையில் , அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சொத்து வாங்கியவர்களுக்கு இந்த வழிமுறைகள் தெரியாது. விற்பனைக்கு வரும் சொத்தில் உள்ள கட்டடத்தின் மதிப்பானது , அது கட்டப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கருத்தில் கொள்ளப்படும். தற்போதைய நிலையில் , எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று பார்த்து அதற்கேற்ப மதிப்பு கழிக்கப்படும். 

தவறான தொகை - வேறுபாட்டு தொகை வசூல்

பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டடத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் வரை இருந்தால் அதை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களே கள ஆய்வு வாயிலாக உறுதி செய்யலாம். இதில் தவறான மதிப்பு குறிப்பிடப்பட்டது தெரிய வந்தால் வேறுபாட்டு தொகை வசூலிக்கப்படும்.

பத்திர எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள் விலை வெகுவாக அதிகரித்துள்ளதால் , கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய பத்திரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உதாரணமாக , ஒரு அலுவலகத்தில் நாளில், 100 பத்திரங்கள் ஒரு வந்தால், அதில் , 50 - க்கும் மேற்பட்ட பத்திரங்கள், கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.

சார் - பதிவாளர்கள், தங்கள் வழக்கமான பதிவு பணிகளுக்கு இடையே , கட்டட கள ஆய்வுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதில், வேலைப்பளு அதிகமாக உள்ளதாக கூறி, பெரும்பாலான சார் பதிவாளர்கள், பத்திரங்களை நிலுவையில் வைக்கின்றனர்.

இதனால், வீடு வாங்கி யோர் பதிவு முடிந்தாலும், பத்திரம் பெற ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க கள ஆய்வு பணியில் , உரிமம் பெற்ற மதிப்பீட்டாளர்கள் அல்லது பொறியாளர்களை பயன்படுத்த பதிவுத் துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி கூறியதாவது ; 

மாநகராட்சி , நகராட்சி பகுதிகளில் , அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன. இதில், கட்டடத்தின் மதிப்பு தொடர்பாக பத்திரத்தில் குறிப்பிடும் மதிப்பு , பொதுப்பணி துறை தள மதிப்பு பட்டியலுடன் பொருந்தும் நிலையில் இருந்தால் , அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பொதுப்பணித்துறை மதிப்புக்கும், பத்திரத்தில் உள்ள மதிப்புக்கும் வேறுபாடு உள்ள பத்திரங்களை மட்டும் கவனமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருக்கிறோம்.

ஆனால் , சார் - பதிவாளர்கள் அனைத்து பத்திரங்களையும் இதைக் காரணமாக கூறி , தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. உரிய காரணம் இல்லாமல் , பத்திரங்களை கிடப்பில் போடும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் ஆட்டோ நம்பர் பிளேட் முறையில் விரைவில் மாற்றம் !! போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஏன் ?
தமிழகத்தில் ஆட்டோ நம்பர் பிளேட் முறையில் விரைவில் மாற்றம் !! போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஏன் ?
80 சென்ட் நிலம் தானம்...மிளகாய் பொடி தூவி உடன் பிறந்த தங்கைக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணன்
80 சென்ட் நிலம் தானம்...மிளகாய் பொடி தூவி உடன் பிறந்த தங்கைக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணன்
சென்னை டூ கன்னியாகுமரி இனி சும்மா பறக்கலாம்! தென் தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் 8 வழிச்சாலை!
சென்னை டூ கன்னியாகுமரி இனி சும்மா பறக்கலாம்! தென் தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் 8 வழிச்சாலை!
 பள்ளிக்கரணை ஆக்கிரமிப்பு: முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 பள்ளிக்கரணை ஆக்கிரமிப்பு: முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வீடியோ

குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2500? மகளிருக்கு பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் CM விஜய் மெகா பிளான்
300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு
காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
ரூ.100 கோடி பழனி கோயில் நிலம் மோசடி.! கிரையப் பத்திரத்தில் வெளியான ஷாக் தகவல்
ரூ.100 கோடி பழனி கோயில் நிலம் மோசடி.! கிரையப் பத்திரத்தில் வெளியான ஷாக் தகவல்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
Embed widget