Crime: உடலுறவுக்கு மறுத்த மனைவி; கத்தியால் குத்திக்கொலை செய்த கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் உத்தரவு
தன்னுடைய உறவினர் மகனுடன்தான் உறவு கொள்ள முடியும் என அம்மு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், அம்முவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அம்மு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். அம்மு, தனது உறவினருடன் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அம்முவும் அவரது உறவினரும் ஒன்றாக சுற்றுவதை பார்த்த சீனிவாசன், மனைவியை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
திருமணம் தாண்டிய உறவு:
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, பாலியல் உறவில் ஈடுபட மனைவி அம்முவை சீனிவாசன் அழைத்துள்ளார். ஆனால், உறவுக்கு வர மறுத்ததால், இருவருக்கும் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது. தன்னுடைய உறவினர் மகனுடன்தான் உறவு கொள்ள முடியும் என அம்மு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், அம்முவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீனிவாசனை கைது செய்தனர்.
திட்டமிட்ட கொலை அல்ல:
இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர், "இந்தச் செயல் திட்டமிட்ட கொலை அல்ல, ஆத்திரமூட்டல் காரணமாக நடந்தது" என வாதம் முன்வைத்சார்.
வாதத்தே கேட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்திய தண்டனை சட்டம் 304, 302 ஆகிய பிரிவின் கீழ் தண்டனை விதித்தார். பின்னர், தீர்ப்பை வாசித்த நீதிபதி, "திடீரென ஏற்பட்ட கோபத்தின் காரணமாக சீனிவாசன் அம்முவை கொலை செய்துள்ளார்.
மேலும், பாலியல் உறவுக்கு ஒத்துழைப்பு தர மறுத்து சீனிவாசனை கீழே தள்ளிவிட்டுள்ளார். தன்னுடைய உறவினர் மகனுடன்தான் உறவு கொள்ள முடியும் என அம்மு கூறியுள்ளார். இதனால், சீனிவாசனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டு கொலை செய்யவில்லை" என தெரிவித்தார்.
குறைந்தபட்ச தண்டனை:
குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 27ஆம் தேதி, தாய் அம்முவை தந்தை சீனிவாசன் குத்தியதை அவர்களது மகன் கண்டான். பின்னர், குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசன் தனது மனைவியின் உடலில் கொசு மருந்து தெளித்துவிட்டு தூங்கச் சென்றது குறிப்பிடத்தக்கது.