மேலும் அறிய
Watch Video | பேருந்தை தாமதமாக எடுத்ததை கேள்விகேட்ட பெண்ணை அடித்து தள்ளிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர்.
பேருந்து புறப்பட தாமதமானது குறித்து கேள்விகேட்ட பெண் பயணி மீது டிரைவர் மற்றும் கண்டக்டர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்
சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருமதா. இவரும் இவருடைய கணவர் செந்திலும் பேரிஸ் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர். அங்கு 5.10 க்கு பெரும்மாக்கத்தில் இருந்து பேரிஸ் செல்லவேண்டிய பேருந்து 5.30 மணி ஆகியும் பேருந்தை எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓட்டுநரிடையே கேட்டபோது அதிகார தோரணையில் காத்திருங்கள் இல்லையேல் இறங்கி செல்லுங்கள் என ஒருமையில் பேசியதால் ஓட்டுநருக்கும் தம்பதியினரிடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் இருவரையும் தாக்கியதில் முருமதா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட பொது மக்கள் பேருந்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்தை தாமதமாக எடுத்ததை கேள்வி கேட்ட பெண்ணை அடித்து தள்ளிவிட்ட பேருந்து ஓட்டுநர், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம்...! pic.twitter.com/dxwgW7yb9q
— Kishore Ravi (@Kishoreamutha) February 2, 2022
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்ததினால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். மேலும் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகளை அலைகழிப்பதாகவும், பேருந்தை தாமதமாக எடுப்பதாகவும், பயணிகளிடையே அதிகார தோரணையில் பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேருந்து நடத்துநர்கள் மற்றும் பயணிகள் இடையே அடிக்கடி இதுபோன்ற மோதல்கள் மற்றும் பேருந்தில் வரும் பயணிகளிடம் கண்ணியக் குறைவாக நடத்துனர்கள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் கூட செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியை சேர்ந்த மீனவ கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மீன் விற்க மீன் கூடையை எடுத்துச் சென்ற பொழுது ,பேருந்தில் ஏற்றாமல் அப்பெண்ணை அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக இருந்தது. அதற்குள் சென்னை பெரும்பாக்கம் அருகே மீண்டும் பெண் ஒருவர் அவமதிக்கப்பட்டு இருக்குற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion