மேலும் அறிய

Chennai Book Fair: புத்தக வாசிகள் கவனத்திற்கு... போனா வராது... சென்னை புத்தகக் காட்சி நாளையே கடைசி நாள்!

பிப்ரவரி 16-ம் தேதி முதல் முதல் மார்ச் 6-ம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 19 நாட்கள் புத்தக காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னை புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி வைத்தார். 45ஆவது சென்னை புத்தக காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் புத்தக அரங்குகளை நேரில் சென்று பார்வையிட்டார். 

பிப்ரவரி 16-ம் தேதி முதல் முதல் மார்ச் 6-ம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 19 நாட்கள் புத்தக காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. சுமார் 800 அரங்குகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புத்தகக் காட்சிக்கான நுழைவுச்சீட்டினை www.bapasi.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். 

மேலும், புத்தக காட்சியை பார்க்க மாணவர்களுக்கு டிக்கெட் இலவசம், மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவு கட்டணமாக பெறப்படுகிறது. புத்தகம் வாங்க வரும் வாசகர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெறுகிறது. புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

Chennai Book Fair: புத்தக வாசிகள் கவனத்திற்கு... போனா வராது... சென்னை புத்தகக் காட்சி நாளையே கடைசி நாள்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி, தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கைக்குழந்தைகளுக்கு அனுமதி இல்லை எனவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவு டிக்கெட் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளையுடன் புத்தக கண்காட்சி முடிய உள்ளது. இதனால், புத்தகம் வாங்க விரும்புவர்கள் இன்று அல்லது நாளை புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை வாங்கி வரலாம். 

முன்னதாக, கொரோனாவின் இரண்டாவது அலை ஓய்ந்ததை அடுத்து நிலைமை சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென ஒமிக்ரான் வைரஸ், கொரோனா மூன்றாவது அலை என உருவானதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு, தினசரி இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்தது. மேலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தக கண்காட்சிக்கும் கொரோனா காரணமாக தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்தச் சூழலில் வைரஸ் பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு தளர்த்தியது. அதன்படி, பிப்ரவரி 16-ம் தேதியிலிருந்து மார்ச் மாதம் ஆறாம் தேதிவரை புத்தக கண்காட்சியை நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget