Chennai Beach: இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
Chennai Beach Blue Light: சென்னை கடலில் இரவில் ஒளிர்ந்த நீல நிறக் காட்சியை பார்ப்பதற்காக , மக்கள் கடற்கரையை நோக்கி படையெடுத்தனர்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் , சென்னையில் உள்ள கடல்கள் நீல நிறத்தில் காட்சியளித்தன. இதன் காரணமாக , மக்கள் பலரும் சென்னை கடற்கரைகளில் சென்று, இக்காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும் , இப்புகைப்படக்காட்சி மற்றும் வீடியோ காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
உயிர் ஒளிர்வு:
இதுபோன்று கடல் வண்ண நிறங்களில் காட்சியளிப்பதை உயிர் ஒளிர்வு என்றும் ஆங்கிலத்தில் பயோலூமினசென்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வண்ண கண்கவர் காட்சியானது எதனால் ஏற்படுகிறது?, இதனால் ஏதேனும் ஆபத்து இருக்கிறது என்றும் தெரிந்து கொள்வோம்.
Just now enjoyed the mesmerising Fluorescent waves at ECR beach!! #Bioluminescence pic.twitter.com/6ljfmlpyRO
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 18, 2024
எதனால் வண்ண காட்சி?
இந்த நிறத்திற்கு காரணம் , கடலில் உள்ள நுண் உயிரிகள். கடலில் வாழும் சில பாசிகள், பூஞ்சைகள் உள்ளிட்ட உயிரினங்களில் உடலில் ஏற்படும் வேதியல் நிகழ்வால் , அவை ஒளியை வெளிப்படுத்துகின்றன. இதனால், இரவு நேரங்களில் அலைகளுடன் சேர்ந்து கண்கவர் காட்சியாக நமக்கு தெரிகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஏன் தெரிந்தது என்பது குறித்தான கேள்விக்கு, கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கையில் “ சமீபத்தில் பெய்த மழையால், சத்துக்கள் கரையை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம், இதனால் இரையை உண்பதற்காக நுண்ணுயிரிகள் , கரையை நோக்கி வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
if you guys are in chennai and not in thiruvanmiyur right now, what are you even doing!! pic.twitter.com/yciciAnj1I
— Sin Gan (@sinofagan) October 18, 2024
ஆபத்து இருக்கிறதா?
இந்த நிகழ்வுகளால், மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமா என்பது குறித்து கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கையில் , இந்த ஒளிக்கு காரணம் நுண்ணுயிர்கள்தான், ஆனால் எந்த நுண்ணுயிர்கள் கடல் ஓரத்தில் வந்திருக்கின்றன என்பதை கண்டறிவது கடினம், சில நேரங்களில் விசத்தனைமை கொண்ட நுண்ணுயிரிகளும் வரலாம். ஆகையால் , கடல் அலை நீரை தொடுவதை தவிர்ப்பது நல்லது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.