Schools: மாணவர்களே கவனிங்க.. தமிழ்நாட்டில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கும்? முழு விவரம்
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் நாளை வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மழை நாட்களுக்காக விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு மாவட்டங்களிலும் பள்ளிகள் வழக்கம்போல முழு நேரம் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்?
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமின்றி கரூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை வழக்கம்போல வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் / தனியார் / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி./ சுயநிதி/ தொடக்க/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளும் நாளை முழு நேரமாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 28-ந் தேதி ( நாளை) உள்ளூர் விடுமுறை போன்ற விடுமுறைகள் ஏதும் அறிவிக்கக்கூடாது என்றும், தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக கடந்த 13-ந் தேதியன்று சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு 4-ந் தேதி அன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் விதமாக, நாளை செவ்வாய்கிழமை பாடவேளையை பின்பற்றிடுமாறு அரசு/ அரசு உதவி பெறும்/ நகராட்சி தொடக்க/ நடுநிலை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக் தெரிவிக்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் கடந்த 6-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
தற்போது அதை ஈடு செய்யும் பொருட்டு நாளை வேலை நாளாக பள்ளிகள் இயங்க உள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும் மழை பரவலாக பெய்தது. இதனால், அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு பள்ளிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.