சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி - தந்தை கூறிய அதிர்ச்சி காரணம்
Chennai Airport News: சோதனை செய்துவிட்டு குடியுரிமை பிரிவுக்கு வரும்பொழுது ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீரென நிர்வாணமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மதுரையை சேர்ந்த, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற மகன் தன் தந்தையுடன் வந்துள்ளார். எப்பொழுதும் சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் வழக்கமான சோதனைகள் நடைபெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து உடைமைகள் பிரிவில் சோதனை முடித்துவிட்டு குடியுரிமை பிரிவுக்கு செல்லும் பொழுது, சம்பந்தப்பட்ட நபர் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வந்துள்ளார்.
இதனை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து மேற்படி நபரை விமான நிலைய ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி அவரது பயணத்தை ரத்து செய்து, அவரது உறவினர் வீடான மதுரைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஏன் திடீரென அவர் நிர்வாணமாக வந்தனர் என கேள்வி எழும்பியுள்ளது. சோதனை செய்யும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா என்ற கோணத்தில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விமான நிலைய தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : அமெரிக்கா குடியுரிமை பெற்ற 47 வயதில் நிரம்பி ஆண் பயணி, அபுதாபி செல்லும் விமானம் மூலமாக அபுதாபி வழியாக அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார். அவருடன் அவர் தந்தை குடியுரிமை சோதனை பிரிவு முடிந்தவுடன், திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓடத் தொடங்கினார். இதனை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை ஆடைகளை அணிய செய்து அனுப்பி வைத்தனர். மகன் மன அழுத்தத்தில் இதுபோன்று செய்து விட்டதாக தந்தை தெரிவித்தார். எனவே அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுரை கூறிய அனுப்பி வைத்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தார்.