Chennai AC Local Train: செங்கல்பட்டு - சென்னை பீச் ஏசி ட்ரெயின்.. எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும் ?
Chennai AC Local Train stops : " சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ஏசி சிறையில் 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது"

சென்னையின் முக்கிய போக்குவரத்துக்காக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்தாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கும் ரயில் போக்குவரத்து மிகப்பெரிய பங்காற்றி வருகிறது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழிப்பாதை Chennai Beach To Chengalpattu Train
சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் வழித்தடம், மிகவும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள், இந்த வழித்தடத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக இந்த வழித்தடம் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு
இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில், இதுபோன்ற மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடத்தில், ஏசி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று சென்னையிலும் ஏசி இரவில் இயக்க வேண்டும் என கோரிக்கையில் எழுந்தது.
சென்னை ஏ.சி ரயில் - Chennai Local AC Train
சென்னை ஐ.சி.எப். ஆலையில் ரயில்வே துறை சார்பில், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன மின்சார ரெயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
சென்னை ஏசி ரயில் சிறப்பம்சங்கள் என்ன ? -Key Features of chennai local Ac Train
பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை ஏ.சி ரயிலில், 12 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும். இந்த ரயில் வண்டியில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது. அதேபோன்று தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. ஏ.சி ரயிலில் படியில் பயணம் செய்வது தவிர்க்கப்படும் உள்ளது.
இதேபோன்று ரயில் பயணத்தின் போது குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் நேரடியாக ரயில் ஓட்டுநரிடம் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது
ரயில் அட்டவணை - Chennai AC Train Schedule
சென்னை ஏ.சி ரயில்கள் அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு, காலை 7 மணி, பகல் 3.45 மணி, இரவு 7.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45க்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்றும் தெரிகிறது. அதேபோன்று தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த ரயில் நிலையங்களில் இருக்கும்? - Chennai AC Local Train Stops
இந்த குளிரூட்டப்பட்ட ரயில் பிரதான வழித்தடத்தில் செல்லும்போது, செங்கல்பட்டு, பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை பூங்கா, சென்னை கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

