மேலும் அறிய
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் அதிர்ச்சி.. சிகிச்சை பலனின்றி சிங்கம் உயிரிழந்த பரிதாபம்..!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த 25 வயது சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உயிரிழந்த சிங்கம் புவனா
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலங்குகளின் உடல்நிலையை கண்காணிக்க மருத்துவ குழு அமைத்து விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக வைரஸ் தொற்றின் காரணமாக எதிர்பாராத விதமாக சிங்கம், புலி உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழந்து வருவது வாடிக்கையாக இருந்து வந்தது. அதேபோல் சமீபத்தில் கூட வரிக்குதிரை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது .

சமீபத்தில் கூட 32 வயதான மணிகண்டன் என்ற சிங்கம் உயிரிழந்தது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த புவனா (25) என்ற சிங்கம் இன்று (ஜூலை 4) இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 25 வயதுடைய புவனா என்கின்ற விஜி என்ற பெண் சிங்கம் மீண்டும் மீண்டும் மலக்குடல் நீழ்ச்சி தொங்கல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தொடர் சிகிச்சையில் இருந்தது. வயது முதிர்வு காரணத்தால் மருத்துவ ரீதியாக சரி செய்ய இயலாத நிலை நீடித்தது.
#JUSTIN | வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் உயிரிழப்பு!https://t.co/wupaoCQKa2 | #Vandaloor #Lion #zoo pic.twitter.com/Mztzdv3Doq
— ABP Nadu (@abpnadu) July 4, 2022
எனவே, அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காரணமாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவால் அந்த விலங்குக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வயது முதிர்வு காரணமாக அறுவை சிகிச்சை பலனின்றி சிங்கம் உயிரிழந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















