மேலும் அறிய
Advertisement
விபத்தில் மனைவி, குட்டியை பறிகொடுத்த சோகம்..! ஆத்திரத்தில் வாகன ஓட்டிகளை கடிக்கும் ஆண்குரங்கு..! செங்கல்பட்டில் நடப்பது என்ன?
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் குரங்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோரை கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பூத்தூர் கிராமத்தில் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் சாலையில் , கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர்களை காலை மற்றும் மாலை நேரங்களில் துரத்தி சென்று தாக்குகிறது .
இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகன செல்வோரை குரங்கு துரத்தும் போது விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நடந்து செல்பவர்களை எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதாகவும், வாகனத்தில் செல்பவர்களை மட்டும் துரத்தி சென்று கடிப்பதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
10 நாட்களுக்கு முன்பு
இதுவரை 15- க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாகவும் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வனத்துறையிடம் தெரிவித்தும் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த ஆண் குரங்குடன், பெண் குரங்கு ஒன்று, குட்டி குரங்கு ஒன்று என மூன்று குரங்குகள் வந்ததாகவும் , அதில் பெண் குரங்கை காரில் அடிப்பட்டு இறந்ததாகவும் குட்டி குரங்கு இருசக்கர வாகனத்தில் அடிபட்டு இறந்ததாகவும், இபபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அச்சத்தில் மக்கள்:
அந்த சம்பவத்திலிருந்து இந்த குரங்கு இது போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொது மக்களை அச்சுறுத்தும் குரங்கை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், பெண் குரங்கு ஆண் குரங்கு மற்றும் ஒரு குட்டி ஆகிய மூன்றும் இப்பகுதியில் சுற்றி திரிந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனத்தில் அடிபட்டு பெண் குரங்கு மற்றும் குட்டி ஆகியவை இழந்துள்ளது. அதிலிருந்து தான் கோபமடைந்த இந்த ஆண் குரங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்பவர்களை துரத்துகிறது. ஆனால் குழந்தைகள் நடந்து சென்றால் கூட அவர்களை எதுவும் செய்வதில்லை, உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion