மேலும் அறிய
Advertisement
சாலையின் நடுவே இருந்த 60 ஆண்டுகால ஆலமரம்...! வேறு இடத்தில் வேரோடு நடப்பட்டது..!
தனியார் வீட்டுமனை சாலையின் நடுவே இருந்த60-ஆண்டுகால ஆலமரம், பசுமை தாயகத்தினர் வேரோடு இடம் மாற்றி பூங்காவில் நட்டனர்.
மாற்று இடத்தில் நட வேண்டும்
செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமத்தில் தனியார் வீட்டுமனை பிரிவு இடத்தில் சாலையின் நடுவே சுமார் 60ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தை பாதுகாத்து மாற்று இடத்தில் நட வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பை அந்த தனியார் வீட்டுமனை பிரிவினர் நாடினர்.
நீர்நிலை பகுதியை ஒட்டி இருந்த பூங்கா
அதனை தொடர்ந்து பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் செளமியா அன்புமணி அவர்களின் வழிகாட்டுதலின் படி பசுமைதாயகம் மாநில துணை செயலாளர் ஐ.நா.கண்ணன் தலைமையில் பசுமைதாயக நிர்வாகிகள் இணைந்து தோட்டக்கலைதுறையின் ஆலோசனை படி சாலையின் நடுவே இருந்த ஆலமரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து பின்னர் ஆலமரத்தை ஜேசிபி இயந்திர உதவியுடன் வேருடன் தோண்டி எடுத்து பாதுகாப்பாக இரண்டு ராட்சத கிரேன் மூலம் ஆலமரத்தை தூக்கி எடுத்து லாவகமாக எடுத்து சென்று, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள நீர்நிலை பகுதியை ஒட்டி இருந்த பூங்கா அமையும் இடத்தில் முதல் மரமாக தோண்டி எடுக்கப்பட்ட அந்த ஆலமரம் நடப்பட்டது.
சுற்றுசூழலை பாதுகாக்கும் பணி
மரம் நடுவதற்கு முன்பு மரத்தின் அளவுக்கு ஏற்ற வகையில் பள்ளம் தோண்டி அதில் அடி உரமாக கால்நடைகளின் சானம் போடப்பட்டது. ஆலமரத்தின் வேர் பகுதி முழுவதும் மாட்டு சானம் கரைசல் ஊற்றப்பட்டு அதன் பிறகு ஆலமரம் நடப்பட்டது. சாலையின் நடுவே இருந்த ஆலமரத்தை பாதுகாப்பாக எடுத்து மாற்று இடத்தில் நட்டு சுற்றுசூழலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட பசுமை தாயகம் அமைப்பினரை அப் பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினார். இதில் பசுமைதாயக நிர்வாகிகள் செல்லப்பா, அசோக், ராகுல் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள், பன்னீர்செல்வம், ராஜேஷ் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion