Chembarambakkam Lake: ஓய்ந்ததா மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன தெரியுமா?
படிப்படியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் குறைக்கப்பட்டு வருகிறது
செம்பரம்பாக்கம் ஏரி
ஏரி நிலவரம்
மாண்டஸ் புயலின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது, குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 1924 கன அடி. ஏரியின் நீர்மட்டம் 22.42 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், மழை பெய்வது குறைந்துள்ள காரணத்தினாலும், நீர்வரத்து சற்று குறைந்துள்ள காரணத்தினாலும் 1500 கன அடி நீர் குறைக்கப்பட்டு, தற்போது 1,600 கன அடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
வானிலை மையம் கொடுத்த அப்டேட் இதுதான்..!
14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்