வோவ்…. 20 வருடங்களுக்கு பிறகு குட் நியூஸ்! விமான நிலையத்தில் இருந்து பேருந்து வசதி! எங்கெல்லாம்?
சென்னை விமான நிலையத்திலிருந்து OMR, ECR, கிளாம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்திலிருந்து OMR, ECR, கிளாம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, விமான நிலையத்திலிருந்து MTC நகர பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான சேவைகள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும், OMR/ECR பகுதிகளுக்கு ரேடியல் சாலை வழியாக ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக விமான நிலையத்தில் இருந்து நேரடியாக எந்த பேருந்து வசதியும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் பேருந்து வசதியை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.
விமான நிலையத்திலிருந்து பேருந்தில் ஏற பயணிகள் கிட்டத்தட்ட 1 கி.மீ.க்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமில்லாமல் டாக்ஸி கட்டணம் அதிகமாக இருந்ததால், விமான நிலையத்திலிருந்து புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்வோர் பேருந்தில் பயணம் செய்வதையே விரும்புவார்கள்.
எனவே, ஜிஎஸ்டி சாலையில் இருந்து விமான நிலையத்திற்குள் பேருந்துகளை திருப்பி விடுமாறு பொதுமக்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மாநகர போக்குவரத்து கழகம், விமான நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்தது. அதன்படி நேற்று விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் கிளாம்பாக்கம் முனையத்திற்கு பேருந்தில் ஏறலாம். ரேடியல் சாலை, OMR மற்றும் ECR வழியாக அக்கரைக்குச் செல்லும் பேருந்துகள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் அன்பரசன் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாம்பரம்-மலையம்பாக்கம்,(படப்பை அருகே உள்ள கிராமம்) மற்றும் ஆதம்பாக்கம்-கிளம்பாக்கம் இடையேயான சேவைகளும் தொடங்கப்பட்டன.






















