மேலும் அறிய
Advertisement
2 ½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை
இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்
இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் சாலையோரத்தில் தங்கி குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அருண் என்பவர், அவருடன் சாலையிலேயே தங்கியிருந்தவரின் இரண்டரை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்த குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, அருண் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழ்ப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு வழக்கு
புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு நிர்ணயிப்பது எப்படி?
புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இழப்பீடு வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் அமலுக்கு வந்த 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி சவுந்தர் அடங்கிய அமர்வு, கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால், அந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
சட்ட விதிகளை அமல்படுத்தினால் மட்டும் போதாது எனவும் கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தொழிற்பூங்கா அமைக்க 2010ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வந்த 2014ம் ஆண்டு ஜனவரியில் நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை மீண்டும் நிர்ணயித்து வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion