மேலும் அறிய

செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

செம்பாக்கம் ஊராட்சியில் இருளர் மக்களுக்கான  பசுமை வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட செம்பாக்கம் ஊராட்சி சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்விளக்கு சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிதண்ணீர் பயன்பாட்டுக்காக அப்பகுதியில் ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் 56 குடும்பத்தினருக்கு கடந்த ஆண்டு  சூரிய ஒளியுடன் கூடிய ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வீடுகளை பழங்குடியினரால் கட்ட முடியாது என்ற நிலையில்  ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டப்படுகிறது. தற்போது தளம் போடும் நிலையில் வீடுகள் தரமற்ற முறையில் கட்டப் பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது வீடு கட்டப்பட்டு வரும் இடத்தில் தண்ணீர் வசதி முற்றி லும் இல்லாத நிலையில் ஒப்பந்ததாரர்கள் வெளியிலிருந்து தண்ணீரை  வாகனங்கள் மூலம் கொண்டுவந்து கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். கட்டப்பட்ட கட்டங்களுக்கு போதிய அளவு தண்ணீர் ஊற்றி வலுப்படுத்தாததாலும், குறைந்த அளவில்  சிமெண்ட் கலவையை பயன்படுத்தியதாலும்  கட்டிமுடிக்கப்பட்ட சுவர்களை  கையால் தேய்த்தாலே  கலவைகள் கரைந்துகொட்டும் நிலையில் உள்ளது. தற்போது வேகவேகமாக தளம்போடும் பணிகள் நடைபெற்று வருவதால் இரண்டு ஆண்டுகளில் வீடுகள் சேதமடையும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிதண்ணீருக்காக மட்டும் ஒரே ஒரு அடிபம்பு அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்த  ஒரேயொரு அடிபம்ப்பையே 60-க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்த  வேண்டியுள்ளது. இதில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தை வலுப்படுத்த  தண்ணீர் ஊற்றச் சொல்கின்றனர் குடி தண்ணீருக்கு வழியில்லாத சூழ்நிலையில் புதிய கட்டடத்திற்கு எவ்வாறு தண்ணீர் ஊற்ற முடியும்.  எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

இதுகுறித்து  செல்வம் கூறுகையில், பல ஆண்டுகளாக வீடுகளின்றி  இருக்கும் இருளர் மக்களுக்கு அரசு  வீடு கட்டித் தருவது வரவேற்கத்தக்கது ஆனால் அந்த வீடுகளை தரமற்ற  முறையில் ஒப்பந்ததாரர் கட்டி வருவது வருத்தம் அளிக்கிறது. சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் வசதி இல்லாத நிலையில் புதிதாக கட்டிவரும் வீடுகளுக்கு தண்ணீர்  ஊற்ற ஒப்பந்ததாரர் வலியுறுத்துவதால் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம். தலையிட்டு வீடுகளை தரமாக கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபொழுது, உடனடியாக  நடவடிக்கை எடுத்து குடிநீர் மற்றும் கட்டிட வேலைக்கும் தண்ணீர் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget