மேலும் அறிய
அந்தமான் வானில் வட்டம் அடித்த விமானம்..வானத்தில் பரிதவித்த 152 பயணிகள்
Chennai Airport: மாலை 4 மணி அளவில், அந்தமான் வான்வெளியை நெருங்கும் போது, அங்கு பலத்த சூறைக்காற்று வீசிக்கொண்டு, மோசமான வானிலை நிலவியது.
![அந்தமான் வானில் வட்டம் அடித்த விமானம்..வானத்தில் பரிதவித்த 152 பயணிகள் Air India passenger flight from Chennai to Andaman carrying 152 passengers returned to Chennai due to bad weather in Andaman TNN அந்தமான் வானில் வட்டம் அடித்த விமானம்..வானத்தில் பரிதவித்த 152 பயணிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/cd5f223d4d062f1b2ced85075898a6181691642553120666_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஏர் இந்தியா
Source : PTI
சென்னையில் இருந்து 152 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், அந்தமானில் மோசமான வானிலை காரணமாக, அங்கு தரை இறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. இதனால் ஏர் இந்தியா விமானத்தில் அந்தமான் சென்ற 152 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். அதைப்போல் அந்தமானில் இருந்து சென்னை வர வேண்டிய 166 பயணிகள், அந்தமான் விமான நிலையத்தில் தவித்தனர்.
பலத்த சூறைக்காற்று, மோசமான வானிலை
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து,152 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் மாலை 4 மணி அளவில், அந்தமான் வான்வெளியை நெருங்கும் போது, அங்கு பலத்த சூறைக்காற்று வீசிக்கொண்டு, மோசமான வானிலை நிலவியது. இதை அடுத்து விமானி, விமானத்தை தரையிறக்காமல், வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தார். ஆனால் வானிலை சீரடைய வில்லை.
![ஏர் இந்தியா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/28/37253051d23d730768498f23cfeeadc71690544741229488_original.jpg)
சென்னைக்கே திரும்பி வந்து தரை இறங்கியது
இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை மீண்டும், சென்னைக்கே திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பித்தனர். இதை அடுத்து அந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், மாலை 6 மணி அளவில், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.
விமானம் ரத்து
இந்த விமானம் மீண்டும் இனிமேல், அந்தமான் புறப்பட்டு செல்ல வாய்ப்பு இல்லை. எனவே விமானம் ரத்து செய்யப்பட்டது. காலை விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. பயணிகள் இதே டிக்கேட்டில், அந்தமான் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில பயணிகள், நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு தங்குவதற்கு இடவசதி செய்து கொடுங்கள் என்று, இந்தியா அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் ஏர் இந்தியா அதிகாரிகள், உள்நாட்டு விமான பயணிகளுக்கு, அதைப்போல் இட வசதி செய்து கொடுக்கும் விதிமுறை இல்லை என்று கை விரித்து விட்டனர். அடுத்து பயணிகள் தங்களுடைய சொந்த செலவில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர்.
சென்னை வருவதற்கு 166 பயணிகள்
இதற்கிடையே இந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், அந்தமானில் இருந்து, சென்னை வருவதற்கு 166 பயணிகள், அந்தமான் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அந்தமானில் விமானம், தரையிறங்காமலே சென்னை திரும்பி வந்து விட்டதை அடுத்து, அந்தப் பயணிகள் சென்னை வர முடியாமல், அந்தமானில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இன்று மீண்டும் திருப்பி அழைத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion