மேலும் அறிய
Advertisement
ராயபுரத்தில் வாய் தகராறு முற்றியதால் வீட்டிற்குள் வந்து சிறுநீர் கழித்த அதிமுக நிர்வாகி
பரமேஸ்வரன் இல்லாத நிலையில் அவரது மனைவி மற்றும் அப்பா , 6 வயது பெண் குழந்தையை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பின்னர் வீட்டினுள் அனைவரும் முன்னதாக சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை ராயபுரம் பி.வி கோவில் தெருவில் வசிக்கும் பரமேஸ்வரன் என்பவர் அதிமுகவின் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் அதே கட்சியை சார்ந்த ராயபுரம் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி பகுதி தலைவர் அறிவழகன் என்பவருக்கும் ஏற்கனவே வாய் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி அறிவழகன், பரமேஸ்வரன் வீட்டிற்குச் சென்று மிரட்டுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவி மற்றும் அப்பா மற்றம் 6 வயது பெண் குழந்தையை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
பின்னர் வீட்டினுள் அனைவரின் முன்னதாக சிறுநீர் கழித்ததுடன் பரமேஸ்வரன் மனைவி பிரியவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் மனைவி ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த நிலையில் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் கட்சி தகராறை வெளியில் வைத்துக் கொள்ளாமல் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து பரமேஸ்வரன் வீட்டினுள் இல்லாத நிலையில் வீட்டில் உள்ள அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி வீட்டினுள்ளேயே சிறுநீர் கழித்த சம்பவம் மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் கொள்ளை
சென்னை வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரிய பிரசாத். இவர் அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 22 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஷாம் பிரசாத் மற்றும் அர்ஜுன் பிரசாத் என இரண்டு மகன்கள் உடன் உள்ளனர். கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு பிரிய பிரசாத் சென்று விட்டார். இவருடைய மகன் அர்ஜுன் பிரசாத் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டார். இதையடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை திறந்து கிடந்தது.
பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் ரூ. 20 ஆயிரத்தை யாரோ சாவியால் பிரோவை திறந்து கொள்ளையடித்து சென்று விட்டனர். அதிர்ச்சியடைந்த அர்ஜூன் தனது தாயாருக்கு தெரிவித்தார். அவர் இந்த கொள்ளை தொடர்பாக ஐ.சி.எப் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் பதிவாகி உள்ள ரேகைகளையும், தடயங்களையும் பதிவு செய்து சென்றனர். அதே பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஐ.சி.எப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion