5G நெட்வொர்க் குறித்த ஆர்வம்: சென்னைவாசிகளே உஷார்.. காவல்துறை கொடுத்த எச்சரிக்கை..
5g network: மொபைல் போன் சிம்களை 5ஜி சேவைக்கு மாற்றுவது தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
5g network: மொபைல் போன் சிம்களை 5ஜி சேவைக்கு மாற்றுவது தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
5ஜி தொலைத்தொடர்பு மென்பொருள் சேவை இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி சேவை சென்னை உட்பட எட்டு நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இந்தியா மொபைல் மாநாட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5ஜி சேவை மூலம் பல சந்தைகள் அடுத்த கட்டத்துக்கு செல்ல சிறப்பாக இருக்கும். 5ஜி சேவையில் ஒரு நொடிக்கு 10 ஜிபி வரை இணையசேவை அதிக வேகமாக இருக்கும். அதே போன்று ஜியோ நிறுவனத்திலும் 5ஜி சேவையானது முக்கிய நகரங்களில் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் மொபைல் போன் சிம்களை 5ஜி சேவைக்கு மாற்ற பலர் ஆர்வமாக உள்ளனர்.மேலும் 5ஜி சேவையை மாற்றவதாக கூறி பலரிடம் மோசடி நடத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக மக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை கூறியதாவது, 4ஜியில் இருக்கும் சேவையை 5ஜிக்கு மாற்றுவதாக கூறி பொதுமக்களிடம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 5ஜிக்கு மாற்றுவது தொடர்பாக யாராவது உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்துள்ள ஓடிபி மற்றும் இணையதள இணைப்புகளை கேட்டால் கொடுக்க வேண்டாம். மேலும் இந்த ஓடிபி எண்கள் மற்றும் இணையதள இணைப்புகளை எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்த வேண்டாம் என பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி, மும்பை உள்ளிட்ட எட்டு நகரங்களில் 5ஜி தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதை மற்ற நகரங்களில் விரிவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் கூறியதாவது, 5ஜி சேவை பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் எனவும் 2035-ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை 450 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் எனவும் கூறப்படுகிறது.
4ஜியில் 10-100 மில்லியன் நொடி தாமதம் இருக்கும். அதே போன்று 5ஜியில் 1ms-க்கு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5ஜி சேவை அதிக நம்பகத்தன்மை மற்றும் அதிக நெட்வோர்க் திறன் கொண்டது. 4ஜி சேவையின் இணையதள வேகத்தை விட இந்த 5ஜி தொலை தொடர்பு சேவை இணையதள வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும். அதே போன்று உங்கள் மொபைலில் 5ஜி சேவை இருக்கிறதா என்பதை அறியுங்கள், அந்த திறன் இருந்தால் புதிய 5ஜி மொபைல் போன் வாங்க வேண்டியதில்லை. நவீன அறுவை சிகிச்சைகளை செய்வதில் இந்த 5ஜி தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.