மேலும் அறிய
Advertisement
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான புதுக்கோட்டை மீனவர்கள் சென்னை வந்தனர்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 24 பேர், இன்று காலை இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள், மற்றும் பாஜக மாநில மீனவனை தலைவர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி தலைமையில் சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று சால்வை அணிவித்து வாகனத்தில் அவர்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 24பேர், ஐந்து படகுகளில், கடந்த மாதம் 18 தேதி நள்ளிரவில் புதுக்கோட்டை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இலங்கை கடற்படையினர் வந்து, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரையும் ஐந்து படகுகளுடன் கைது செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு மீன்களையும், படகுகளையும் பறிமுதல் செய்துவிட்டு, 24 தமிழக மீனவர்களையும் சிறையில் இலங்கை சிறையில் அடைத்தனர்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை
இதை அடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், தமிழக அரசுக்கு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனடியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பிரதமர், மற்றும் ஒன்றிய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதினார். இதனால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேசினர். இதை அடுத்து இலங்கை நீதிமன்றம், இம்மாதம் 17ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் பேரையும், விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் பெயரில் விடுதலை செய்யப்பட்ட 24 புதுக்கோட்டை மீனவர்களும், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் தூதரகத்தின் பராமரிப்பில் இருந்தனர். அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை உட்பட அனைத்து சோதனைகளும் நடந்தன.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்கள்
அதோடு இவர்கள் அனைவருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டு இன்று அதிகாலை கொழும்பிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தனர் அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் பாஜக மாநில மீனவர் அணி தலைவர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி தலைமையில் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து பழங்கள் வழங்கி வரவேற்றனர் அவர்களை வேன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion