சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர் 2 பேர் உயிரிழப்பு!
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர். பயங்கரமாக அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த இரண்டு மாணவர்கள் முகமது நஃபூல், சபீர் அமீது ஆகியோர் என்பதும், அவர்கள் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகள் கவனத்திற்கு....
நாட்டில் செல்போன் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடக்கும்போதும், வாகனத்தில் பயணம் செய்யும் போதும் என எங்கே பார்த்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லும் கையுமாகத்தான் இருக்கிறார்கள்.
சாலையில் நடக்கும்போதும், வாகனத்தில் பயணம் செய்யும்போதும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் கவனக்குறைவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நாம் அனைவரும் அறிந்தும் அந்த தவறை திருத்திக்கொள்ள கஷ்டப்படுகிறோம் என்பதே நிதர்சனம்.




















