மேலும் அறிய
மறுபிறவி எடுத்த ஆலமரம்....கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!
மறுபிறவி எடுத்ததால் அதற்கு பலர்கள் தூவி, தண்ணீர் ஊற்றி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
![மறுபிறவி எடுத்த ஆலமரம்....கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..! sowmiya anbumani Many people celebrated their birthday by sprinkling, pouring water and cutting a cake as a hundred-year-old banyan tree - TNN மறுபிறவி எடுத்த ஆலமரம்....கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/28/bec6c5f00ec09a6418b3e2db103297ef1709111550388113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மரத்திற்கு கேக் வெட்டி கொண்டாடியபோது
சாலை விரிவாக்க பணிக்காக பலநூறு ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை மாற்று இடத்தில் பசுமைத்தாயகம் மூலம் நடப்பட்டு மறுபிறவி எடுத்ததால் அதற்கு பலர்கள் தூவி, தண்ணீர் ஊற்றி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
ஆலமரம் கிளைகள் மலர்ந்து மறுபிறவி
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த வெண்பேடு பகுதியில் தனிநபர் மனைபிரிவு சாலையில் அமைந்துள்ள பலநூறு ஆண்டுகள் பழைமையான, ஆலமரத்தை கடந்த ஆண்டு அகற்றப்பட்டு அந்த ஆலமரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக பசுமைத்த தாயகம் சார்பில் வெண்பேடு கிராமத்தில் நீர்நிலை பகுதியில் தனியாக இடம் ஒதுக்கி நடப்பட்டது. தற்போது ஓர் ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் ஆலமரம் கிளைகள் மலர்ந்து மறுபிறவி எடுத்த ஆலமரத்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்ச்சி பசுமைத்தாயகம் சார்பாக கொண்டாடப்பட்டது.
![மறுபிறவி எடுத்த ஆலமரம்....கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/28/c02650f1fe6da1ee33ed36ef01fdc4b71709111609288113_original.jpg)
மனித குலத்தை காப்பாற்றுவோம்
இந்நிகழ்ச்சிக்கு பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு பிறந்தநாள் காணும் ஆலமரத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தண்ணீர் ஊற்றி கேக் விட்டு கொண்டாடினர். ஆலமரம் கூறுவது போல் " நீங்கள் எங்களை காப்பாற்றியதால். நாளை உங்கள் மனித குலத்தை காப்பாற்றுவோம் " இப்படிக்கு ஆலமரம் என்ற வாசகத்தை பொருத்தி கேக்கைவெட்டி கொண்டாடினர் பிறகு ஆலமரம் உயிர் பிழைப்பதற்கு தினசரி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள மனை பிரிவு மற்றும் பள்ளி வழக்கத்திற்கு மரக்கன்றுகள் நட்டனர்.
![மறுபிறவி எடுத்த ஆலமரம்....கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/28/f987a8ebf5eca93c580761329658b93c1709111642052113_original.jpg)
செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஒரு மரத்தை பிடுங்கினால் பத்து மரக்கன்றுகள் நடவேண்டும் என்பது அரசின் விதியில் உள்ளது . ஆனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள், பேருந்து நிலையம் விரிவாக்க பணி போன்ற இடங்களில் பல்வேறு மரங்கள் அரசு மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அதற்கு மாறாக தமிழ்நாடு அரசு ஒரு இடத்தில் கூட மரக்கன்றுகள் நடப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மெத்தனமாக செயல்படாமல்
மேலும் ராணிப்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கம் பணிக்காக பல ஆண்டு காலம் பழமையான மரங்களை வெட்டிய போது அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு அதனை தடுத்து நிறுத்தினர். பசுமைத்தாயகம் மூலம் மரத்தின் கிளைகளை மட்டும் அகற்றப்பட்டு அந்த மரத்தை வேரோடு புடுங்கி மாற்று இடத்தில் நடுவதற்கு இடம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் கடந்த 15 நாட்களாக அந்த மரத்தை பாதுகாத்து வருகிறோம். இதற்கு உடனடியாக தமிழ்நாடு அரசு மெத்தனமாக செயல்படாமல் மரம் நடுவதற்கு மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
![மறுபிறவி எடுத்த ஆலமரம்....கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/28/bbcfea24dda97d51c58a1b30fd2289a41709111679882113_original.jpg)
பசுமைத்தாயகத்தை தயங்காமல் அணுக வேண்டும்
மரம் வளர்ப்பதால் நமக்கு தண்ணீர் கொடுக்கிறது, நீர் ஆதாரத்தை சேமிக்கிறது, பறவைகள் உயிர் வாழ பலனாக இருக்கிறது இதனை கவனம் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு கொண்டனர். இனி வரும் காலங்களில் தமிழ்நாடு அல்லது தனியார் அமைப்பினர் ஒரு மரம் அகற்றும் பொது அதற்கு மாறாக 10 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மரங்கள் அதிகமாக அழிக்கப்படுகின்றன அழிக்கப்படும் மரங்களுக்கு உயிர்ப்பிக்க வேண்டுமென்றால் பசுமைத்தாயகத்தை தயங்காமல் அணுக வேண்டும் என படுமைதாயகம் அமைப்பு தலைவர் சௌமியா அன்புமணி கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion