நடிகர் வடிவேலுவிற்கு சொந்த ஊர் மக்களே எதிர்ப்பு! குலதெய்வ கோயிலில் நடந்தது என்ன?
நடிகர் வடிவேலுவிற்கு சொந்தமான குலதெய்வ கோயில் விவகாரத்தில் வடிவேலுவிற்கு எதிராக அந்த ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் வடிவேலு. இவர் மதுரையைப் பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் இவரது குலதெய்வம் கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பரமக்குடியில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோயிலே வடிவேலுவின் குலதெய்வம் ஆகும்.
வடிவேலுவின் குலதெய்வ கோயில்:
இந்த கோயிலை அந்த ஊர் மக்கள் நிர்வகித்து வருகின்றனர். கோயில் தொடர்பான முக்கிய முடிவுகளில் வடிவேலுவின் ஆலோசனையும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடிவேலுவின் ஆதரவாளரான பாக்கியராஜ் இந்த கோயிலை தனக்கு சொந்தமாக்க முயற்சிப்பதாக அந்த ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடிவேலு மீது குற்றச்சாட்டு:
இந்த கோயிலில் பரம்பரை அறங்காவலர் என்ற ஒரு பொறுப்பை உருவாக்க வடிவேலு திட்டமிட்டு இருப்பதாக அந்த ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக அவர் ஊர் மக்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கோயிலின் பரம்பரை அறங்காவலர் பாக்கியராஜ் என்பவர் கோயிலை கைப்பற்ற முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றிணைந்து இந்த கோயிலின் தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு புதிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வடிவேலு பெயரைக் கெடுக்க முயற்சி:
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாக்கியராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இந்து சமய அறநிலையத்துறையினர் கோயிலின் ராஜகோபுர பணிகளை நிறைவேற்றும் விதமாக ஆய்வு செய்து சென்றுள்ளனர். அதைத்தடுக்கும் விதமாக ராஜகோபுர ஆலோசனைக் கூட்டம் என்று அறிவித்துவிட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று பொய்யான வதந்தியைப் பரப்பிவிட்டு கோயிலின் தலைமகனான வடிவேலு பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற வகையிலும், எனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் மக்களைத் தூண்டிவிட்டு சில வெளியூர் நபர்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
இந்த கோயில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. பிரபல நடிகர் வடிவேலுவிற்கு எதிராக அவரது குல தெய்வம் அமைந்துள்ள கோயில் ஊர் மக்களே எதிராக திரும்பி நிற்பது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

