செங்கல்பட்டு: அதிரடி மாற்றத்தில் தாசில்தார்கள்! யார் யாருக்கு எந்தப் பதவி? முழு விவரம்!
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஏழு தாசில்தார்கள், பல்வேறு காரணங்களுக்காக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தாசில்தார் அல்லது வட்டாட்சியர், ஒரு தாலுகாவின் நிர்வாகத் தலைவராக பணிபுரியும் மிக முக்கிய பொறுப்பாக இருக்கிறது. வட்டாட்சியர்களின் முக்கியப் பணியாக, நில வருவாய் மற்றும் பிற அரசு வரிகளை வசூல் செய்வது. நில உரிமை விவரங்கள், நிலப் பயன்பாடு மற்றும் எல்லைகள் போன்ற நில ஆவணங்களைப் பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் இவர்களின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாகும்.
சான்றிதழ் சரிபார்ப்பு
இதேபோன்று வட்டாட்சியர்கள் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிழ், வருமானச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்ற பல்வேறு அரசுச் சான்றிதழ்களை வழங்குவதிலும் இவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தாலுகா அளவில் சட்ட ஒழுங்கை பராமரிப்பதிலும் இவர்கள் பங்கு மிக முக்கியமாக இருந்து வருகிறது.
இயற்கைச் சீற்றங்கள் போன்ற பேரிடர் மேலாண்மை சமயங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதும், பொதுமக்கள் மனுக்கள் மற்றும் புகார்களை விசாரித்து தீர்வு காண்பதும் இவர்களின் பணிகளாகும். ஒரு தாலுகாவிற்கு வட்டாட்சியர் பொறுப்பு என்பது முதுகெலும்பை போன்றவர்கள் என கூறலாம்.
செங்கல்பட்டு தாசில்தார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வட்டாட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மார்க் டிப்போ மேனேஜர், ( பல்லாவரம் திருமழிசை ) வட்ட தாசில்தார் பாலாஜி, மதுராந்ததிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுராந்தகம் வட்டாட்சியர் கணேசன், செய்யூர் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
செய்யூர் வர்த்தாட்சியர் சரவணன், திருப்போரூர் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
திருப்போரூர் வட்டாட்சியர் நடராஜன், சிறப்பு தாசில்தார் (SSS) பல்லாவரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறப்பு தாசில்தார் (sss), பல்லாவரம் அப்துல் ரசிக் - டாஸ்மார்க் டிப்போ மேனேஜர், ( பல்லாவரம் திருமழிசை ) மாற்றப்பட்டுள்ளார்.
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராதா , கண்காணிப்பாளர், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை, செங்கல்பட்டு பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.





















