மேலும் அறிய
Advertisement
’பாரத மாதா நினைவாலயம்’ என்ற பெயரை மாற்றுங்கள்- அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை
நினைவாலயம் என்பது இறந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை குறிக்கும் என்பதால் பாரதமாதா நினைவாலயம் என்ற பெயரை பாரத மாதா ஆலயம் என மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்
பாரத மாதா நினைவாலயம் என்ற பெயரை மாற்றக்கோரி, இந்து முன்னனி சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணி சிவா தனது இறுதி நாளை கழித்தார். அப்போது அவர் சொந்தமாக நிலத்தை வாங்கி, அதில் பாரத மாதா கோயில் கட்ட நினைத்தார். ஆனால் தனது இறுதிக்காலத்தில் உடல் நிலை சரியில்லாததால் இறந்துவிட்டதால், பாரத மாதா கோயில் கட்டுவதற்காக வாங்கிய இடத்திலியே தியாகி சுப்பிரமணிய சிவாவின் உடலானது அடக்கம் செய்யப்பட்டது.
அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து சுதந்திர போராட் தியாகிகள் தியாகி சுப்பிரமணி சிவாவின் கனவான பாரதமாதா கோயிலை கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் பாரத மாதா நினைவாலயம் கட்டப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆகஸ்டு ஒன்றாம் தேதி செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பாரத மாதா நினைவாலயத்தை திறந்து வைத்தார். மேலும் அமைச்சர் திறந்து வைத்த கட்டடம் மற்றும் கல்வெட்டில் ’பாரத மாதா நினைவாலயம்’ என பதிக்கப்பட்டது. ஆனால் நினைவாலயம் என்பது இறந்தவர்களை புதைக்கும் இடம் என பொருள்படுவதால் பாரதி ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னனி அøமைப்பை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இன்று இந்து முன்னனியை சேர்ந்த நிர்வாகிகள் பாரத மாதா நினைவாலாயம் என்ற பெயரை ’பாரத மாதா ஆலயம்’ என மாற்றி, ஆகமவிதிப்படி தினமும் பாரத மாதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கோரிக்கை மனுவை மனு அளித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion