Breaking News LIVE: நாட்டின் முதல் AI பள்ளி.. ஆசிரியர்களுக்கு இனி வேலை இல்லையா? மாற்றாக வருகிறது ChatGPT மென்பொருள்
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
மதுரையில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து ஏற்பட்டது எப்படி என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் விளக்கம்:
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில் “26.8.23 அன்று காலை 5.15 மணி அளவில் மதுரை யார்டில் உள்ள தனியார் பார்ட்டி கோச்/தனி நபர் கோச்சில் தீ விபத்து ஏற்பட்டதாக நிலைய அதிகாரி தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் 5.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். 7.15 மணிக்கு தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மற்ற பெட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தனியாரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த பெட்டிகள் ரயில் எண். 16730 கொண்ட மதுரை விரைவு ரயிலில் (புனலூர் _ மதுரை எக்ஸ்பிரஸ்) நேற்று மாலை நாகர்கோவில் சந்திப்பில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து 3.47 மணிக்கு மதுரை வந்தடைந்ததும் அந்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்டு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டது.
அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகள், சட்ட விரோதமாக எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்டு பல பயணிகள் பெட்டியிலிருந்து இறங்கினர். முன்னதாக சில பயணிகள் நடைமேடையிலேயே கீழே இறங்கி இருந்தனர். ஆகஸ்ட் 17ஆம் தேதி லக்னோவில் இருந்து இந்த ரயில் தனது பயணத்தை தொடங்கியது. சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் மூலம் நாளை அவர்கள் சென்னை திரும்ப திட்டமிட்டு இருந்தனர். அங்கிருந்து லக்னோ திரும்பவும் முடிவு செய்திருந்தனர்.
ஐஆர்சிடிசி போர்ட்டலைப் பயன்படுத்தி எந்தவொரு தனிநபரும் ரயிலில் பார்ட்டி கோச்சை முன்பதிவு செய்யலாம். கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த பெட்டியை போக்குவரத்து சேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் AI பள்ளி.. ஆசிரியர்களுக்கு இனி வேலை இல்லையா? மாற்றாக வருகிறது ChatGPT மென்பொருள்
செயற்கை நுண்ணறிவின் மூலம் மாணவர்கள் மத்தியில் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: இனிமேல் சோஷியல் மீடியாவில் தீயா வேலை பாக்கனும் - விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுரை
"தமிழ்நாட்டு மக்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்துக்குமான தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இயக்கத்தின் தலைமை பிறப்பிக்கும் உத்தரவு, இயக்கத்தின் புதிய அறிவிப்புகள், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் வந்தவுடன் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தெரிவித்தவுடன் அதனை உரிய ஹேஷ்டாக்குடன் பதிவிட்டு ட்ரெண்ட் செய்ய வேண்டும்" என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: சந்திரயான் 3 வெற்றியை நெகிழ்ச்சியோடு பார்த்தேன் - பிரதமர் மோடி
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை ஒட்டுமொத்த நாடே கொண்டாடியதை நெகிழ்ச்சியோடு பார்த்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: ரயில் தீ விபத்து - உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்
தமிழகத்தின் மதுரையில் நடந்ந பயங்கர ரயில் தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களின் வளர்ச்சி வேளாண் சார்ந்தது மட்டுமின்றி, தொழில் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.