World Liver Day 2024: கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவும் சூப்பர் டிரிங்க்ஸ் - இதைப் படிங்க!
World Liver Day 2024: கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைப்பவர்களை காணலாம்.
![World Liver Day 2024: கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவும் சூப்பர் டிரிங்க்ஸ் - இதைப் படிங்க! World Liver Day 2024 Aloe vera juice to mint cucumber water 10 homemade drinks to boost liver health World Liver Day 2024: கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவும் சூப்பர் டிரிங்க்ஸ் - இதைப் படிங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/18/a45bcb85b2ac66193372a4aa5b2a70dc1713443993466333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, கல்லீரல் பாதிப்புகள் சத்தமேயில்லாமல் வளரக் கூடியது; தீவிரமானதும் அதன் அறிகுறிகள் தெரியவரும். ஆரம்பத்திலேயே கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது. கல்லீரல் நோய்கள் ஏற்படமால் தடுக்கவும் அதன் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளில் நோக்கம்.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே தயாரிக்க கூடிய சில உணவுகளாக ஊட்டச்சத்து நிபுணர் ராஷி டானியா சொல்வதை கீழே காணலாம்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழையில் உள்ள Aloin, Saponins ஆகிய இரண்டும் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும். செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவும். குறிப்பாக, கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்றும். இதிலுள்ள வைட்டமின் ஏ, சி,இ, ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஃப்ரீ ராடிகல் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை கற்றாழை சாறு அருந்தாலம். மோர் உடன் சேர்த்து அருந்தலாம்.
கேரட் ஜூஸ்
பீட்டா கரோட்டீன்ஸ் அதிகம் நிறைந்த கேரட் ஜூஸ் கல்லீரல் சீராக செயல்பட உதவும். கோடை காலத்தில் அடிக்கடி கேரட் ஜூஸ் குடிப்பது கல்லீரல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
லெமனெட் வித் இஞ்சி
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, இஞ்சி உள்ளிட்டவை கல்லீரல் அதிகம் பாதிக்காமல் இருக்க உதவும்.
புதினா, வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளிரியில் உடல் வெப்பநிலையை குறைக்கும் திறன் கொண்டது. வெள்ளரியும் புதினாவும் இயற்கையாகவே உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் பண்பு கொண்டிருக்கிறது. புதினாவில் உள்ள ஆன்டி -ஆக்ஸிடன்ட்ஸ் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது.
ஆரோக்கியமான கல்லீரலுக்கு எதெல்லாம் நல்லது?
- பச்சை காய்கறிகள், கீரை வகைகள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
- நல்ல கொழுப்புள்ள உணவுகள் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
- வால்நட்,அவகேடோ,ஆலிவ் எண்ணெய் ஆகியவைகள் கல்லீரலுக்கு நல்லது.
- போதிய அளவு தண்ணீர் அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் தண்ணீர் பெரும் உதவி புரிகிறது. தண்ணீர் ஒரு சிறந்த ’detoxicating agent'.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஆரோக்கியமான காலை உணவை உண்பது; உப்பு, கொழுப்பு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வது, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது, அதிகளவில் நீர்ச்சத்து எடுத்துக் கொள்வது, மது அருந்தாமல் இருப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)