மேலும் அறிய

World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம்; வரலாறு, முக்கியத்துவம் என்ன?

World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது.

பார்ட்டி சூழல் அவ்வளவாக பிடிக்காது, நிறைய மனிதர்கள் கூட்டத்தை கண்டு உற்சாகம் ஏற்படாது; மாறாக அந்த இடத்தைவிட்டு தப்பித்து எப்படா போகலாம் என்றிருக்கும், உரையாடல்களை தொடங்குவதில் சில தயக்கங்கள்.., சில நெருங்கிய நட்பு வட்டங்களில் மட்டுமே உங்களால் கொண்டாட்ட மனநிலையில் இருக்க முடியும், தனிமையை கொண்டாடுவது, சுய அறிதல்: இப்படியான குணங்கள் இருந்தால் இன்ட்ரோவர்ட்!

இன்ட்ரோவர்ட்

கொஞ்ச காலங்களாகவே இன்ட்ரோவர்ட், எக்ஸ்ட்ரோவர்ட் என்ற வார்த்தைகளை நாம் அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். ’அவங்க அதிகமாக பேசமாட்டங்க; ரொம்ப அமைதியானவங்க.’ -இப்படியான வார்த்தைகளை இன்ட்ரோவர்ட் குறிப்பிட பயன்படுத்தப்படும். 'Shy'  இன்ட்ரோவர்ட், Antisocial என்பது ஒன்றல்ல. Shyness உள்ளவர்கள் இன்ட்ரோவர்ட் அல்ல. இன்ட்ரோவர்ட் என்பவர்கள் தேவையான இடங்களில் தங்களது எண்ணங்களை முன்வைப்பார்கள். பெரும் குழு இருந்தாலும் தனித்து தன்னுலகில் இருப்பவர்கள். யாருடனும் பேச பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. மாறாக, இன்ட்ரோவர்ட் தங்களது எனர்ஜியை குறிப்பிட்ட குழுவுடன், தேவையான பொழுதுகளில் வெளிப்படுத்த விருப்பப்படுவர். அதுவும் அவர்கள் தேர்வாக இருக்கும். மேலும், பிறவியிலேயே இன்ட்ரோவர்ட் என யாரும் கிடையாது. சூழல், அனுபவங்கள் ஒருவரை இன்ட்ரோவர்ட்-ஆக மாற்றுகிறது. பிறகு, அதிலிருந்து வெளியேறுவது என்பது சிரமமாகிவிடுகிறது. இன்ட்ரோவர்ட் பற்றி 1920-களுக்கு பிறகே பலருக்கும் தெரிய வருகிரது. உளவியலாளர் கார்ல் ஜங்க் ( Carl Jung) என்பவர் முன்னெடுப்பில் இன்ட்ரோவர்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது எனலாம். இவர் ’concept of introversion’ பற்றி 1921 Psychological Types" என்ற புத்தம் வெளியிட்டார். ஒருவர் தனிமையை ரசிக்க பழகிக்கொள்வதும் இன்ட்ரோவர்ட் டைப்தான். Social introverts, Thinking introverts, Anxious introverts, Inhibited introverts என பல வகைகள் இருப்பதாகவும் சொல்கிறார். இன்ட்ரோவர்ட் நபர்களை பார்த்து பரிதாபமோ, கருணையோ அவசியம் இல்லை. இன்ட்ரோவர்ட் தங்கள் உலகில் மகிழ்ச்சியாக இருப்பாங்க என்றும் உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக இன்ட்ரோவர்ட் தினம்

Felicitas Heyne , ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் முதன் முதலில் ‘உலக இன்ட்ரோவர்ட் தினம்’  என்பதை உருவாக்கினார். இன்ட்ரோவர்ட் பர்ஸானலட்டி ட்ரெயிட் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றியும் பேசும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட நாள். 2011-ம் ஆண்டு முதல் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2, ம் தேதி ‘உலக இன்ட்ரோவர்ட் தினம்’.  அன்றைய தினம் தொடர் கொண்டாட்டங்களுக்கு பிறகான ஒரு நாள். இன்ட்ரோவர்ட் பெரிதாக பார்ட்டிகளை விரும்புவதில்லை. எனவே, ஜனவரி, 2-ம் தேதி தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 

புரிதல் அவசியம்

இன்ட்ரோவர்ட்  Shyness குணம் கொண்டவர்கள் அல்ல. உரையாடுவதற்கு தயக்கம் இருப்பதே 'Shyness' குறிப்பிடப்படுகிறது. ஆனால்,இன்ட்ரோவர்ட் அவசியமான சூழல், நேரங்களில் பேசுவார்கள். நெருங்கிய வட்டத்திற்குள் மட்டுமே தங்கள் இயல்பை முழுமையாக வெளிப்படுத்துவர். 'Comfortable' சூழல், மனிதர்களிடம் பழக விருப்பம் கொண்டவர். யாருடமும் பேச பிடிக்கவில்லை என அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. அர்த்தமுள்ள, அவசியமான உரையாடல்களை மட்டுமே முன்னெடுக்க விரும்புவர். 

இன்ட்ரோவர்டிடம் இந்தக் கேள்விகளை கேட்காதீர்கள்..

நீங்கள் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறீர்கள்?

நீ ஏன் இப்படி இருக்க? எல்லோரிடமும் பேசிப் பழக வேண்டும். 

அதிகமாக பேச பழகலாம் இல்லையா? 

நீங்க ரொம்ப சென்சிடிவாக இருக்கீங்க.

அனைவருடனும் பழக கற்றுக்கொள்ள வேண்டும். இப்போ இல்லைன்னா எப்போ? இப்படியே எவ்வளவு நாள் இருப்பீங்க?

நீங்க ரொம்ப ஓவர்திங்க் பண்றீங்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget