Healthy Hair: தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேஜிக் இருக்கும் உணவு - என்ன தெரியுமா?
Healthy Hair: தலைமுடி ஆரோக்கியமாக வளர கீரை வகைகள் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அடர்த்தியான, கருப்பு நிறத்துடன் தலைமுடி இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆரோக்கியமாக, மென்மையான தலைமுடி வேண்டும் என்பது ஆண், பெண் என்ற வேறுபாடின்றி விரும்பப்படுவதாகும். உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக முடி உதிர்வு ஏற்படுவது இயலபானது. அதை தடுத்து உணவு முறை மாற்றத்தின் மூலம் தலை முடி ஆரோக்கியமாக வளர உதவும் வழிமுறைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிப்பதை காணலாம்.
தலை முடி உதிர்வு ஏற்படுவது ஏன்?
தலைமுடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஸ்ட்ரெஸ், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, மாசு, ஊட்டச்சத்து குறைபாடு இப்படி பல காரணங்களை நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். தலைமுடிவு உதிர்வுக்கு ஷாம்பு மாற்றுவது, தேங்காய எண்ணெய் மாற்றி பயன்படுத்துவம மட்டும் பயனளிக்காது. முடி உதிர்வுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றவாறு ட்ரீட் செய்ய வேண்டும். பொடுகு, வறட்டி உள்ளிட்ட பிரச்ச்னைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே தலைமுடி உதிரும் பிரச்சனைஅயை சரி செய்யலாம். கீரை வகைகள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். பயோடின் நிறைந்த உணவுகளையும் கூட சாப்பிட வேண்டும். வாரத்தில் மூன்று நாள்கள் டயட்டில் கீரை சேர்க்கலாம்.
கீரை தலைமுடி வளர்ச்சிக்கு உதவுமா?ஏன்?
இரும்புச்சத்து:
கீரை வகைகள் இரும்புச்சத்து நிறைந்தது. இது ஸ்கால்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆக்ஸிஜன் ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இதனால், தலைமுடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. ஸ்கால்ப் குளிர்ச்சியடைந்து தலைமுடி வலிமை பெறும். வைட்டமின் சி நோய் எதிப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். இது தலைமுடி பளபளப்புடன் இருக்க உதவும்.
Folate நிறைந்தது:
கீரையில் ’Folate' பொருள் நிறைந்துள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கும் உதவும். Folate குறைபாடு இர்ந்தால் தலைமுடி மெலிதாக இருக்கும். அதனால் Folate நிறைந்த கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது. கீரையில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் அதை டயட்டில் அடிக்கடி சேர்க்கலாம்.
வைட்டமின் ஏ:
கீரையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் ஏ மிகவும் அவசியமானது. கீரையில் உள்ள வைட்டமின் ஏ ஸ்கால்ப் Sebum உற்பத்தி செய்ய உதவும். அதாவது, ஸ்கால்ப் உற்பத்தில் செய்யும் இயற்கையான எண்ணெய்.. இது தலைமுடியின் ஈரப்பதத்தை தக்கவைத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். ஸ்கால்ப் வறண்டுபோவதையும் தடுக்கும். ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருந்தால் தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடண்ட்:
கீரை வகைகளில் ஆன்டி-ஆக்ஸிடன் நிறைந்தது. இது தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பது, முடி உதர்தலை தடுப்பது ஆகியவற்றோடு சேர்த்து ஸ்கால்ப் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
- கீரையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கீரை முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாரம் இரண்டு நாள் ஏதாவது ஒரு கீரை வகையை சாப்பிடலாம்.
- முட்டை, சிக்கல், சியா, நட்ஸ் உள்ளிட்ட புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். முட்டையில் பயோட்டின் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுக்கிறது. நமது தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அப்போதுதான் முடி வளரும். பயோடின் அளவு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
- முடி வளர்ச்சிக்கு அவசியமான துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றால் நிரம்பிய பாதாம் தினமும் சாப்பிடலாம். அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர விரும்பினால் பாதாம் சிறந்த தேர்வு. பாதாம் முடியை அதன் வேர்களில் இருந்து வளர செய்து, தலை முடி பளபளப்பாகவும் வலுவாகவும் மாற்ற உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், பாதாம் முடி உதிர்வை தடுக்கும்.