டீ உடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருக்கா? நிபுணர்கள் சொல்வதை கவனிங்க!
டீ உடன் பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியமானது இல்லை என நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
டீ ப்ரேக் அல்லது காலை உணவு சாப்பிட நேரமில்லை உள்ளிட்ட காரணங்களால் டீ உடன் பிஸ்கட், ரஸ்க் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைகளை காணலாம்.
காலை அல்லது மாலை நேர ஸ்நாக் என எதுவாக இருந்தாலும் டீ உடன் பிஸ்கட் சாப்பிடுவது உடல்நலனுக்கு ஆரோக்கியம் தருவது அல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டீ உடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடும்போது அது உடலிலுள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மைக்கு வழுவகுக்கும். ஊட்டச்சத்து நிபுணர் மன்பீரித் கல்ரா இது தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.
பிஸ்கட் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது. இதில் ரீஃபைண்ட் சர்க்கரை அதிகம் இருக்கிறது. அதிகமாக சர்க்கரை உள்ள பிஸ்கட் சாப்பிடுகையில் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனை ஏற்படுத்தும்.
பிஸ்கட் வகைகள் பெரும்பாலும் மைதா மாவில் தயாரிக்கப்படுகிறது. இது குடலில் உள்ள மைக்ரோபையோமே வளர்ச்சியை பாதிக்கும். ஊட்டச்சத்து ஏதும் இல்லாத மைதா மாவு சாப்பிடுவது உடல் நலனுக்கு தீங்கானது. அதோடு, பிஸ்கட் தயாரிப்பதற்கு பாமாயில் பயன்படுத்தப்படுகிறது.
ஹெர்பல் டீ:
கொத்தமல்லி டீ
கொத்தமல்லி விதையில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ ஆகியவற்றுடன் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இதற்கு உடலிலுள்ள கெட்ட கொழுப்பை எரிக்கும் திறன் இருக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடலிலுள்ள நச்சுக்கள் வெளியெற உதவுகிறது. இது ஆன்டி-மைக்ரோபயல், ஆன்டி-ஃபங்கல் பண்புகளை கொண்டுள்ளது. அதனால் சரும செல்களை பராமரிக்க உதவுகிறது.
இது இயற்கையான டீடாக்ஸிஃபையர் என்றழைக்கப்படுகிறது. உடலிலுள்ள நச்சுக்களை அகற்றி சரும உள் அமைப்புகளில் உள்ள இறந்த செல்களை நீக்கும் பண்பை கொண்டுள்ளது. சருமத்தில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி தண்ணீர் உதவியாக இருக்கும்.
புதினா டீ:
புதினா டீ ஏற்படும் ஹார்மோன் சீரற்றதன்மையை குறைக்க உதவுகிறது. இளஞ்சூட்டில் தினமும் புதினா டீ குடிப்பது நல்லது. இதோடு எலும்பிச்சை பழச் சாறும் சேர்த்து குடிக்கலாம்.
கிரீன் டீ:
உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக்கொள்ள இந்த கிரீன் டீ சிறந்த சாய்ஸ். இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட் தன்மை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. பி.சி.ஓ.எஸ்., அறிகுறிகள் இருப்பவர்களும், உடல் எடை அதிகரிக்கிறது என்று நினைப்பவர்களும் இதை அருந்தலாம். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க கிரீன் டீ-யை டயட்டில் சேர்ப்பது நல்ல பலன் தரும் என்கின்றனர் நிபுணர்கள்.