Exploding Phones: மொபைல் பேட்டரிகள் வெடிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன? இத தெரிஞ்சுகோங்க
Exploding Phones:எலக்ட்ரானிக் சாதனங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவிலாக வெப்பத்தை மட்டுமே தாங்கக்கூடியவை
மொபைல் பேட்டரி திடீரென வெடிப்பது அல்லது தீ பிடித்து எரிவது தொடர்பான செய்திகள் நம்மை வந்தடைவது அதிகரித்திருக்கிறது எனலாம். ஸ்மாட்ஃபோன் பயன்படுத்தி கொண்டிருக்கும்போதே திடீரென வெடிப்பது அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த சந்தேகங்கள் எழும். செல்போன்கள் தீ பிடிப்பதை எப்படி தடுப்பு உள்ளிட்டவை குறித்து தகவல்களை இங்கே காணலாம்.
ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடித்து தீப்பிடிப்பதற்கான சில பொதுவான காரணங்கள்:
அதிக வெப்பம் நிறைந்த சூழல்
எலக்ட்ரானிக் சாதனங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவிலாக வெப்பத்தை மட்டுமே தாங்க கூடியவை.
ஸ்மார்ட்போன் பேட்டரிகளும் அப்படியே. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பு வரையில் நல்ல நிலையில் இருக்கும். கடும் வெப்பம் மிகுந்த சூழலில் பேட்டரியை பயன்படுத்தினால், நீண்டகாலத்திற்கு பிறகு அது வெடிக்கும் வாய்ப்பை உருவாக்கும். நேரடி சூரிய ஒளி அல்லது மூடிய காரில் நீண்ட நேரம் இருந்தால் ஸ்மார்ட்போன் நன்றாக சூடாகிவிடும். அப்போது நடைபெறும் வேதிவினையின் காரணமாக பேட்டரி வெடித்து விடும்.
ஸ்மாட்ஃபோன்கள் சந்தையில் விற்பனைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் தரம் உறுதிசெய்யப்படும். அப்போதே, எதாவது கோளாறுகள் இருந்தால் கண்டறியப்பட்டு சரிசெய்யப்படும்.
ஸ்மாட்ஃபோன்களில் லித்தியம் - அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் கேத்தோடு மற்றும் அயனோட் இருக்கும். அதாவது பாசிடிவ், நெகடிவ் டெர்மினல்; அவற்றோடு எலக்ட்ரோலைட். இதன் மூலமே மின்சாரம் கடத்தப்படுகிறது. இந்த செயல்பாடுகளில் சார்ட் சர்க்யூட் ஏற்படும்போது வெப்பநிலை அதிகரிக்கிறது. தொடர்ந்து நடைபெறும் வேதிவினை காரணமாக பேட்டரி வெடிக்கிறது.
பேட்டரியில் கோளாறு ஏற்பட்டுள்ளதை எப்படி கண்டறிவது?
- ஸ்மாட்ஃபோன்களை பயன்படுத்தும்போது சூடாக இருப்பது.
- ஸ்மாட்ஃபோனில் எதாவது சிறு சத்தம் ஏற்படும். இதற்கு பேட்டரியில் ஏற்பட்டுள்ள கோளாறே காரணம்.
- பேட்டரி அதிக நேரம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் வெடிப்பதற்கு காரணமாகும்.
- அதாவது, பேட்டரி தயாரிக்கப்படும்போது, அதற்கான குறிப்பிட்ட கால அளவு இருக்கும். அந்த அளவை விட அதிக நேரம் உபயோகப்படுத்தப்பட்டால் பேட்டரியில் கோளாறு ஏற்படும்.
- ஃபோன் அடிக்கடி ஆஃப் ஆகிறதா? நிச்சயம் பேட்டரியில் கோளாறு இருக்கிறதென்று அர்த்தம். உங்கள் பேட்டரி பழுதாகிவிட்டது என்று அர்த்தம்.
என்ன செய்யலாம்?
- ஸ்மாட்ஃபோன்களை அதற்கு கொடுக்கப்பட்ட சார்ஜர்களில் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.
- பேட்டரியின் திறனறிந்து அதற்கு உகந்ததை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஒவ்வொரு போனிலும் பேட்டரி திறன் மாறுபடும். வோல்டேஜ் அளவு மாறும். எனவே, ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்துவது நல்லது.
- அதிக நேரம் சார்ஜ் செய்யக்கூடாது. இது பேட்டரியின் வாழ்நாளை குறைக்கும். அதோடு, பேட்டரியில் கோளாறு ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
சார்ஜ் செய்துகொண்டே ஃபோன் பேசலாமா?
செல்போன் சார்ஜிங்கில் உள்ள நிலையில் பேசலாமா என்றால், அப்படி செய்யவேகூடாது. இப்படி செய்யும்போது ஃபோனிற்கு அதிகமான சிக்னல் தேவைப்படுகிறது. சார்ஜிங் நிலையில் அதில் மின்சாரம் பாயும் வோல்ட் அளவிலும் நிலையற்றதன்மை ஏற்படுகிறது. இதனால் பேட்டரியின் வெப்பநிலை உயர்ந்து திடீரென்று வெடித்து சிதறுகிறது என்கிறது அறிவியல்.