Watch video: சாப்பிடலாம்.. விளக்கேற்றலாம்.. டூ இன் ஒன்... இதோ! பட்டர் மெழுகுவர்த்தி செய்முறை!
உருகி வழியும் மெழுகும் அதில் எழும் வெண்ணெய் வாசனையும் நம்மை கிட்டத்தட்ட சாப்பிடத் தூண்டும் வகையில் உள்ளது என்றாலும் உண்மையிலேயே நம்மால் அதனை சாப்பிடவும் முடியும்!.
சோஷியல் மீடியாவில் எதிர்பார்க்காத வகையில் எது எதுவோ ட்ரெண்ட் ஆகும். அந்த வகையில் அண்மையில் பட்டர் மெழுகுவர்த்தி என்பது இணையம் முழுவதிலும் உள்ள அனைவரையும் உற்று கவனிக்க வைத்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. உருகி வழியும் மெழுகும் அதில் எழும் வெண்ணெய் வாசனையும் நம்மை கிட்டத்தட்ட சாப்பிடத் தூண்டும் வகையில் உள்ளது என்றாலும் உண்மையிலேயே நம்மால் அதனை சாப்பிட முடியும்!. அதனால் இதனை அழகானதொரு டேபிள்டாப் அலங்காரமாகவோ அல்லது உண்ணும் உணவாகவோ கொள்ளலாம். இந்த டூ இன் ஒன் மெழுகுவர்த்தி இணையத்தில் ட்ரெண்ட் ஆவதில் ஆச்சரியமில்லைதானே.
இந்த வைரல் பட்டர் மெழுகுவர்த்தி என்றால் என்ன?
View this post on Instagram
இது வெறுமனே உறைந்த வெண்ணெயை குமிழியாக்கித் தயாரிக்கப்படுகிறது, அதன் மேல் ஒரு திரி பொருத்தப்பட்டுள்ளது, இது உண்மையான கேண்டிலை போலவே காட்சியளிக்கும். நீங்கள் இந்த மெழுகுவர்த்தியை ஏற்றி உங்கள் மேஜை அல்லது கேக்குகள் போன்ற உணவுகளை அலங்கரிக்கலாம், இறுதியில் அதை சாப்பிடலாம். சாதாரணமாக கேக்களில் மெழுகு வழிகிறதே என்கிற கவலை இதில் இல்லை.