பெண்களே எச்சரிக்கை...! உங்க சானிட்டரி நாப்கின் பாதுகாப்பானதா? இதை செக் பண்ணுங்க...
அது அந்த பஞ்சில் அப்படியே தங்கி விடுகிறது. இது கருவுறாமை, ஹார்மோன் சீர்குலைவு, தைராய்டு செயலிழப்பு, நீரிழிவு நோய்,
பெண்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று சானிட்டரி நாப்கின்ஸ். வசதிக்கு ஏற்ப பேட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றாலும் , சராசரியாக இதற்காக மாதம் செலவிடும் தொகை என்பது அதிகம்தான்.
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று நகரத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 16,800 சானிட்டரி நாப்கின்ஸை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது. disposable napkins (ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவது ) மூலம் சுற்றுச்சூழலுக்கும் , உடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த சில பென்கள் மென்ஸ்ட்ரல் கப் போன்ற reusable வகைகளுக்கு மாறி வருகின்றனர். இன்னும் சிலர் tampons ஐ பயன்படுத்தி வருகின்றனர்.
tampons மற்றும் சானிட்டரி நாப்கின்ஸை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக அதில் பயன்படுத்தப்படும் இராசயனங்களை சொல்லலாம். முதலில் டையாக்ஸ்லின் . டையாக்ஸ்லினை நாப்கின்ஸ் மற்றும் டாம்போன்ஸ் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. 100% பருத்தியால் ஆனது என விளம்பரப்படுத்தப்படுகிறதல்லவா ஆனால் அறுவடை செய்த தூய பருத்தி பார்ப்பதற்கு அத்தகைய வெள்ளையாக இருப்பதில்லை. அதனை பிளீச் செய்வதற்காகத்தான் டையாக்ஸ்லினை பயன்படுத்துகின்றனர். சானிட்டரி பேட்களில் டையாக்ஸ்லின் அளவு குறைவுதான் என்றாலும் கூட , சிறுக சிறுக உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு சில பக்க விளைவுகளை காலப்போக்கில் ஏற்படுத்தும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது இடுப்பு அழற்சி நோய், கருப்பை புற்றுநோய், நோயெதிர்ப்பு குறைபாடு, ஹார்மோன் செயலிழப்பு, பலவீனமான கருவுறுதல், நீரிழிவு மற்றும் பலவீனமான தைராய்டு பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அடுத்தாக உறிஞ்சும் திறனை அதிகப்படுத்த Rayon என்னும் வேதி பொருளை பயன்படுத்துகின்றனர். இதிலும் டையாக்ஸின் உள்ளது. அதன் பிறகு ஃபியூரான் போன்ற பூச்சிக்கொல்லிகளும் சானிட்டரி பேடில் இருக்க வாய்ப்பிருக்கிறது. பொதுவாக பருத்தி தாவரத்திற்கு இத்தகைய பூச்சுக்கொல்லிகளை பயன்படுத்துவார்கள் . அது அந்த பஞ்சில் அப்படியே தங்கி விடுகிறது. இது கருவுறாமை, ஹார்மோன் சீர்குலைவு, தைராய்டு செயலிழப்பு, நீரிழிவு நோய், எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அதன் பிறகு வாசனைக்காக பயன்படுத்தப்படும் வேதி பொருட்கள். இது உறுப்பினை பாதிக்கும் என்கின்றனர். இரத்த ஓட்டத்தில் நுழைந்து , ஒவ்வாமை மற்றும் தோல் பிரச்சனிகளை ஏற்படுத்தக்கூடியது. இது தவிர நீண்ட நேரம் சானிட்டரி நாப்கின்கள் அல்லது டம்பான்களை உபயோகிப்பது ஸ்டேஃபிளோகோகஸ் என்னும் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்னும் அதிர்ச்சி தகவலையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். ஸ்டேஃபிளோகோகஸ் பாக்டீரியாவானது டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்னும் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியது. அதோடு வயிற்றுப்போக்கு, வாந்தி, சொறி, தலைச்சுற்றல், குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற பக்க விளைகளையும் ஏற்படுத்தும் .
மாற்றுகள் :
ஆர்கானிக் சானிட்டரி நாப்கின்கள்: வணிக ரீதியாக வளர்க்கப்படும் பருத்தியில் இருந்து பூச்சிக்கொல்லி மற்றும் ப்ளீச்சிங்கில் பயன்படுத்தப்படும் குளோரின் டை ஆக்சைடு வாயு இல்லாமல் விற்பனைக்கு வரும் இத்தகைய சானிட்டரி நாப்கின்ஸ் ஆறுதலான ஒன்று.
அடுத்தாக ஆர்கானிக் துணி பட்டைகள்: பாதுகாப்பான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி பொருள். இதனை, சணல் அல்லது மூங்கிலால் செய்கின்றனர். இதனை ஒருமுறை பயன்படுத்திய பிறகு காஸ்மெடிக் பை போன்ற சிறிய பையில் வைத்து துவைத்து காய வைக்கலாம்.
மென்ஸ்ட்ரல் கப் : கம் ரப்பர் போன்ற இயற்கையான, நச்சுத்தன்மையற்ற பொருட்களால் செய்யப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய மென்ஸ்ட்ரல் கப் ஒரு சிறந்த தேர்வாகும். ஒரு நல்ல தரமான கோப்பையின் விலை சுமார் ரூ. 700 இருக்கும் ஆனால் அடுத்த பத்து வருடங்களுக்கு நீங்கள் இன்னொன்றை வாங்க வேண்டியதில்லை.ஆனால் சரியான அளவில் வாங்க வேண்டியது அவசியம்.