புரட்டாசி மாசம் ஆனாலும் விதவிதமா பிரியாணி செஞ்சு சாப்பிடலாம்!
பிரியாணி பிரியர்களுக்கு ஒரு சூப்பரான பிரியாணி ரெசிபி இது. சைவ உணவாகவும் இருக்கனும், பிரியாணி இருக்கனும்னு எதிர்பார்க்குறவங்களுக்கு இந்த ரெசிபி செஞ்சு பாருங்கள்
பிரியாணி பிரியர்களுக்கு ஒரு சூப்பரான பிரியாணி ரெசிபி இது. சைவ உணவாகவும் இருக்கனும், பிரியாணி இருக்கனும்னு எதிர்பார்க்குறவங்களுக்கு இந்த ரெசிபி செஞ்சு பாருங்கள்
கத்திரிக்காய் பல விதமா ரெசிபி இருக்கும், சட்னி, குழம்பு, வறுவல் என பல விதமாக இருக்கும். இதுல கத்திரிக்காய் பிரியாணி ரெசிபி செஞ்சு பாருங்கள் எல்லாருக்கும் பிடிக்கும்.
கத்திரிக்காய் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி - 250 கிராம்,
வெங்காயம் - 1 (சிறிதாக நாறுகிறது )
கத்திரிக்காய் -3 வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்
தக்காளி - 3 ( சிறிதாக நறுக்கியது )
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன் ,
மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன்,
புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - கையளவு
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை -
- அரிசியை அரைவேக்காடாக வேக வைத்து கொள்ளவும்
- நறுக்கிய கத்தரிக்காய் உடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்து, அதை எண்ணையில் வறுத்து எடுக்கலாம். அல்லது தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து வறுத்து எடுக்கலாம்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை வதக்கி கொள்ளவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை வாடை மாறும் வரை சிம்மில் வைத்து வதக்கவும்.
- அடுத்து தனியா தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கி அதனுடன் புதினா, கொத்தமல்லி, கருவேப்பில்லை சேர்த்து மேலும் வதக்கவும்.
- இப்போது அரை வேக்காடாக வெந்த சாதத்தை சேர்த்து வதக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு பாதி அளவு அரிசியை போட்டு அதற்க்கு மேல் கத்தரிக்காய் சேர்க்கவும். பின் அதற்கு மேல் மீதி பாதி அரிசியை சேர்க்கவும். அதற்கு மேல் கத்தரிக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.பின்னர் மேலே தம் சேர்க்கவும்.
- சிம்மில் வைத்து தம் போடவும்.
- பின் இறக்கி அதனுடன் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
- கத்தரிக்காய் தம் பிரியாணி தயார்.