Chocolate Day: சாக்லேட் டே.. கடுப்பில் சிங்கில்ஸ்.. போட்டுத்தாக்கும் மீம்ஸ்.. இணையத்தில் வைரல் பதிவுகள்..
காதலர் தின வாரத்தில் அனைவரும் கொண்டாடும் நாள் சாக்லேட் டே. இந்த தினத்தை காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கொண்டாடும் ஒரு நாளாகும்.
காதலர் தின வாரத்தில் அனைவரும் கொண்டாடும் நாள் சாக்லேட் டே. இந்த தினத்தை காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கொண்டாடும் ஒரு நாளாகும்.
பிப்ரவரி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது காதலர் தினம். காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன் அந்த வாரம் முழுவதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட், பூக்கள், க்ரீட்டிங் கார்டு போன்ற பரிசுகளை பரிமாரிக்கொள்வர்.
ஆனால், காதலர் தினம் ஒரு நாளில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. காதலர் தினத்திற்கு முன்பு, ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவற்றை கொண்டாடுவார்கள். மேலும் அன்பின் நாட்காட்டியில் மேள் குறிப்பிட்ட ஒவ்வொரு நாளும் அதன் சொந்த முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
சாக்லேட் தினம்:
பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் டே என கொண்டாடப்படுகிறது. சாக்லேட் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைவரும் விரும்பி உண்ணும் பொருள் சாக்லேட் ஆகும். உலகம் முழுக்கவே சாக்லேட் அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதற்கு வயதோ, பாலினமோ பாகுபாடில்லை. சாக்லேட் கொடுப்பதால் யாரை வேண்டுமானாலும் மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும். அன்புக்குறியவர்களுக்கு இந்த தினத்தில் சாக்லேட் கொடுத்தால் அவர்களை மகிழ்ச்சியில் மூழ்குவார்கள். அந்த நாள் முழுவதுமே இனிமையாக இருக்கும். அந்த நாள் முழுவதும் இதனை நினைத்து கொண்டே இருப்பர். சாக்லேட் தினத்தில் சாக்லேட் தின கவிதைகளை எழுதி கொடுக்கலாம்.
இதற்கிடையில் காதலை சொல்லி ஜெயித்தவர்களும் சரி, காதலை சொல்லி நிராகரிக்கப்பட்டவர்களும் சரி, இன்னும் காதலிக்காமல் இருப்பவர்களுக்கும் என அனைத்து தரப்பினரையும் மீம்ஸ்கள் மகிழ்ச்சிக்குள்ளாக்கும். நிச்சயம் அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டி தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு எவ்வளவு கடினமான சூழலில் இருந்தாலும் மீம், போட்டோக்கள், வீடியோக்கள் நம் இறுக்கமான சூழலை மாற்றி விடும்.
சாக்லேட் தின மீம்ஸ்:
காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட் கொடுத்து கொண்டாடி வரும் நிலையில், சிங்கில்ஸ் கடுப்பில் மீம்ஸ் போடு வருகின்றனர். சமூக வளைத்தளங்களில் இந்த மீம்ஸ் வைரலாகி வருகிறது.
View this post on Instagram